சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரித்து வருவது கவலைக்குரியது என கல்முனை பொலிஸ் நிலைய பரிசோதகர் வாஹீட்

சமூக பிணக்குககள் குறைந்த போதிலும்   சிறுவர்  துஸ்பிரயோகம் அதிகரித்து வருவது கவலைக்குரியது என கல்முனை பொலிஸ் நிலைய பரிசோதகர் வாஹீட் தெரிவித்தார்.
சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஶ்ரீ சுபத்திரா ராம முன்பள்ளி மாணவர்களின்  சந்தை திறப்பு  சங்கைக்குரிய ரண்முத்துகல சங்கரத்ன தலைமையில் நடைபெற்ற போது
 அதிதியாக கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தனது கருத்தில்
சிறுவர்கள் தொடர்பில்  பெற்றோர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.உங்கள் பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள்.யாருடன் பழகுகிறார்கள் என்பதனை அவதானிக்க வேண்டும்.ஏனெனில் பொலிஸ் நிலையங்களுக்கு பல்வேறு விதமான துஸ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுக் கொண்டிருக்கிறது.இதில் சில முறைப்பாடுகளே கிடைக்கின்றது.நூறு வீதமான முறைப்பாடுகள் எமக்கு கிடைப்பதில்லை.சில விடயங்கள் மூடி மறைக்கப்படுகின்றன.கிடைக்கப்பெரும் முறைப்பாட்டின் அடிப்படையில் பார்த்தால் நாற்பது தாண்டிய நபர்களே பெரும்பாலும் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுவதாக அறியமுடிகிறது.
அதிலும் விசேடமாக குடும்ப உறவினர்களே இத்துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவதை காண கூடியதாக உள்ளது.நாங்கள் எமது உறவினர்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை நாம் நம்புகின்றோம்.ஆனால் அப்படி அல்ல.எமது குழந்தைகளை நாம் தான் வளர்க்க வேண்டும்.பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புகின்ற முச்சக்கர வண்டி ஓட்டுனர்களின் செயற்பாடுகளை அவதானியுங்கள்.உங்கள் பிள்ளைகள் ஒரு சில சந்தர்ப்பங்களில் வாகன ஓட்டுனர்கள் தங்கள் மடிகளில் வைத்து அழைத்து செல்வதை நாம் கண்டிருக்கின்றோம்.இந்த நிலைப்பாடு மாற வேண்டும்.
இவ்வாறான செயற்பாடுகளால் தான் பிள்ளைகள் பாதிக்கப்படுகின்றார்கள்.ஆகவே இந்த விடயங்கள் பாரதூரமானவை.சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.அவர்கள் எதிர்கால தலைவர்கள்.சிறுவயதில் துஸ்பிரயோகத்திற்கு ஆளான சிறுவர் பொலிஸ் நிலையம் நீதிமன்றம் ஆகியவற்றில் தனக்கான நீதியை பெற்ற போதிலும் பருவம் அடைந்து சமூகத்தில் இணைந்து வாழ்வதில் சவால்களை எதிர்கொள்கிறார்.அவரால் அச்சமூகத்தில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
அவர் சமூகத்தின் பல்வேறு பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாக வேண்டி ஏற்படுகிறது.ஆகவே இந்த விடயங்கள் பாரதூரமானவை.சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.அவர்கள் எதிர்கால தலைவர்கள்.சிறுவயதில் துஸ்பிரயோகத்திற்கு ஆளான சிறுவர் பொலிஸ் நிலையம் நீதிமன்றம் ஆகியவற்றில் தனக்கான நீதியை பெற்ற போதிலும் பருவம் அடைந்து சமூகத்தில் இணைந்து வாழ்வதில் சவால்களை எதிர்கொள்கிறார்.அவரால் அச்சமூகத்தில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
அவர் சமூகத்தின் பல்வேறு பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாக வேண்டி ஏற்படுகிறது.பிள்ளைகளுக்கு அளவான சுதந்திரம் வழங்க வேண்டும்.மிதமிஞ்சிய சுதந்திரம் வழங்குவதன் ஊடாக உங்களின் பிள்ளைகளை பாதுகாக்க உங்களால் முடியாது.அதே வேளை பாதுகாப்பு பிள்ளைகள் விடயத்தில் முக்கியமாக இருக்க வேண்டும்.பாடசாலை அதிபர் ஆசிரியர் பெற்றோர்களது செயற்பாடுகளை பார்த்து தான் பிள்ளைகள் வளர்கின்றார்கள்.நீங்கள் சரியாக செயற்படாவிட்டால் பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும்.இதன் பின் பிள்ளைகளை திருத்தி எடுப்பது என்பது கஸ்டமான விடயம்.அதுமட்டுமல்ல.
போதைவஸ்து பிரச்சினை தற்போது தலைதூக்கி உள்ளது.
இதனை தடுப்பதற்கு கலால் திணைக்களம் உள்ளது.அதன் செயற்பாடுகள் எவை என்பது எமது மக்களிற்கு தெரியாது உள்ளது.ஒரு சிலருக்கு அவ்வாறான திணைக்களம் உள்ளதா என்பதே தெரியாமல் இருக்கிறது.
போதைப்பொருளை கட்டுப்படுத்துவது அத்திணைக்களத்தின் பிரதான பணியாகும்.நாட்டின்சட்டத்தினையும் ஒழுங்கையும் செயற்படுத்துவது தான் பொலிஸாரின் கடமையாகும்.பொலிஸாரும்  போதைப்பொருளை கட்டுப்படுத்த உதவி செய்கின்றனர்.
எமது பிரதேசத்தில் ஒரு இலட்சத்திற்கு அதிகமான மக்கள் வாழ்கின்றார்கள் ஆனால் பொலிஸார் 163 பேர் தான் இருக்கின்றார்கள். இதில் ஒரு பங்கினர் விசேட பிரமுகர் பாதுகாப்பிற்காக அமர்த்தப்பட்டுள்ளனர். மற்றயவர்கள் விசேட கடமைகள் ஏனைய பாதுகாப்பு கடமைகளுக்காகவும்பொலிஸ் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் உள்ள கடமைகளுக்கும் நீதிமன்றம் போன்ற செயற்பாடுகளுக்கும் கடமைக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.
இச்சொற்பமான பொலிஸாரை வைத்துக்கொண்டு 75 பிரிவுகளை கொண்டுள்ள கல்முனை பொலிஸ் பிராந்தியத்தில் செயற்படுவது என்பது கஸ்டமான விடயமாகும்.வாகன பற்றாக்குறை பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காரணமாக ஒரு சில விடயங்களை 100 வீதம் கட்டுப்படுத்த முடியாது உள்ளது.
ஆனால் வழக்குகளை தொடர்ச்சியாக எடுத்து கொண்டு வருகின்றோம். கைதுகள் நடக்கின்றது நீதிமன்றத்தில் சந்தேக நபர்களை கொண்டு சேர்க்கின்றோம்.நீதிமன்றத்தின் ஊடாக அபராதம் விதிக்கப்படுகிறது. தண்டனை பெற்றுகொடுக்கப்படுகிறது. பொலிஸார் ஒரு குற்றச்செயலில் ஈடுபடும் நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிவானினால் தண்டனை பெற்றுக்கொடுத்தாலும் அதே நபர் மீண்டும் குறித்த குற்றத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் போது மக்கள் மத்தியில் பொலிஸார் மீது வீண் விமர்சனங்களை முன்வைப்பதை காண முடிகிறது.
அதாவது ஏதாவது அந்த நபரிடம் பொலிஸார் வாங்கி விட்டார்கள்.இலஞ்சம் பெற்றுவிட்டார்கள் என கதைப்பதாகும்..நாங்கள் வாங்கிறது இல்லை.அதற்கான அவசியம் இல்லை எங்கள் வாழ்க்கையை நடாத்தி செல்வதற்கு அரசாங்கத்தினால் சம்பளம் வழங்கப்படுகிறது. எவரிடமும் பிச்சை எடுக்க வேண்டிய அவசியமும் எமக்கில்லை. ஒரு சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தவறான நடவடிக்கையில் சந்தர்ப்ப சூழலில் ஈடுபடுவதை மறுக்க இயலாது தான். அவ்வாறானவர்கள் சம்பந்தமான எமது இலங்கை பொலிஸ் ஏற்பாடுகளை மேற்கொண்டு இருக்கிறது. நிறைய பேருக்கு இடமாற்றம் வழங்கி இருக்கின்றோம். சேவையில் இருந்து இடைநிறுத்தியுள்ளோம்.
எனவே பெற்றோர்கள் பாடசாலைக்கு செல்லும் தமது பிள்ளைகள் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தை நாடி பாடசாலைக்கு வருகிறார்களா? படிக்கின்றார்களா ? என விசாரிக்க வேண்டும்.
எமக்கு இப்பிரதேச தேசிய பாடசாலை ஒன்றின் அதிபர் தொலைபேசி ஊடாக தொடர்பினை மேற்கொண்டு க.பொ.த சாதாரணம் படிக்கின்ற நான்கு மாணவர்கள் பாடசாலைக்கு வருகின்றார்கள் இல்லை என சுட்டிக்காட்டினார். அம்மாணவர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு நாளும் ஆசியரியர்களை அனுப்பி கொண்டிருக்க முடியாது.
இதனை கட்டுப்படுத்த ஏதாவது செய்யுங்கள் என கோரிக்கை விடுத்தார். இதனை கட்டுப்படுத்துவது யார். அம்மாணவர்களின் பெற்றோர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள்.
 இது அவர்களின் கடப்பாடு ஆனால் சமூக நிறுவனங்களை எல்லாம் தாண்டி பொலிஸ் நிலையத்திற்கு இவ்வாறு பிரச்சினை வருகின்றது.
எனவே இதில் கவனம் எடுப்பது அனைவரதும் கடமையாகும்இன்னும் போதைவஸ்து பிரச்சினை சிறுவர் துஸ்பிரயோகம் ஆகியவை கூடிச்செல்ல இடமளிக்க முடியாது அதை கட்டுப்படுத்த சகலரும் விழிப்பாக இருக்க வேண்டும் என கூறினார்.
பாறுக் ஷிஹான்

 

Related posts

Leave a Comment