செரீனா வில்லியம்ஸ் மார்பக புற்றுநோய் குறித்து வெளியிட்ட காணொளி வைரலாகிறது

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை ஒட்டி பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அக்டோபர் மாதம் முழுவதும் சர்வதேச மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

1990ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிவினில்ஸ் என்ற இசைக்குழுவால் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வெளியிடப்பட்டு உலகளவில் பிரபலமான “ஐ டச் மைசெல்ஃப்” என்று தொடங்கும் பாடலை தனது மார்பகங்களை கையால் மறைத்துக்கொண்டு செரீனா வில்லியம்ஸ் பாடும் வகையில் இந்த காணொளி அமைந்துள்ளது.

“இனம், நிறம் என எவ்வித வேறுபாடுமின்றி உலகம் முழுவதுமுள்ள பெண்களை பாதிக்கும் பிரச்சனைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான் என்னுடைய எல்லையை மீறி இந்த காணொளியை வெளியிட்டுள்ளேன்” என்று இதுகுறித்து செரீனா கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment