ஈக்வேடாரில் புதிதாக காணப்பட்ட தேன்சிட்டு காக்கப்படுமா?

ஈக்வேடாரில் புதியவகை ஹம்மிங் பேர்ட் (தேன்சிட்டு) ஒன்று சர்வதேச பறவையியலாளர் குழு ஒன்றால் காணப்பட்டுள்ளது.

அந்த பறவைக்கு ஒரியோட்ரோகிலஸ் சைனோலெமஸ் அல்லது நீல கழுத்து ஹில்ஸ்டார் என பெயரிடப்பட்டுள்ளது. நான்கு அங்குல நீளத்திற்கு கரு நீல கழுத்து இருப்பதும் இதற்கொரு காரணம்.

‘பல்லுயிர் பெருக்கம்’

ஈக்வேடாரரில் பல்லுயிர் பெருக்கம் சிறப்பாக உள்ளது. இந்நாட்டில் மட்டும் 132 வகை ‘ஹம்மிங் பேர்ட்’கள் உள்ளன.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நீல கழுத்து ஹில்ஸ்டார்கள் மொத்தமே சுமார் 300 தான் உள்ளதாக கூறும் பறவையியல்யாளர்கள், இந்த இனம் அழிவின் விளிம்பில் இருப்பதாக கூறுகின்றனர்.

ஈக்வேடார், வெனிசுவேலா, டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகளை சேர்ந்த பறவையியலாளர்கள் குழு இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளது. இந்த குழுவுக்கு ஃப்ரான்சிஸ்கோ தலைமை தாங்கினார்.

அச்சுறுத்தலில் வாழ்விடம்

பசிபிக் பெருங்கடல் அருகே உள்ளா லோஜா மற்றும் எல் ஒரோ ஆகிய மாகாணங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 3000 முதல் 3,700 மீட்டர் உயரத்தில் இந்த பறவைகள் வசிப்பதாக கூறும் பறவையியலாளர்கள், இப்போது இப்பறவைகளின் அந்த வாழ்விடம் சுரங்கத் தொழிலால் அச்சுறுத்தலில் உள்ளதாக விவரிக்கிறார்கள்.

பிபிசி

Related posts

Leave a Comment