சுவிஸ் தூதுவர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன ஆகியோருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த சந்திப்பின்போது அவர்களிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

 

இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பாளர் மேஜர் ஜெனரல் டீஏஆர் ரணவக்க மற்றும் சுவிஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment