மூலிகைகளின் ராணி துளசியின் குணங்கள்.

மாத்திரைகளை விட நம்மைச் சுற்றி கிடைக்கும் பொருட்களில் எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது. ஆனால் அதனை யாருமே பயன்படுத்த முன்வருவதில்லை. மூலிகைகளின் ராணியான துளசியை உட்கொள்வதால் உடல் நலனுக்கு ஏற்படும் நன்மைகள் தெரியுமா?

தொண்டைப்புண் :
தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும்.

தலைவலி :
தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு துளசியை அரைத்து, அதில் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும்.

இதய நோய் :
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

சிறுநீரக கற்கள் :
துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.

பசி :
துளசி விதையில் உள்ள நார்ச்சத்துக்கள், செரிமான செயல்பாட்டை சீராக்கி, மலச்சிக்கல், வாய்வுத்தொல்லை போன்ற வயிற்று கோளாறு பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. அதே போல அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்பசியை கட்டுப்படுத்திடும்.

வியர்வை நாற்றம் :
உடலில் வரும் வியர்வை நாற்றத்தை தவிர்க்க குளிக்கும் நீரில் முதல் நாளே சில துளசிகளை போட்டுவைத்திடுங்கள். மறுநாள் காலையில் அந்த நீரில் குளித்தால் வியர்வை நாற்றம் வராது.

Related posts

Leave a Comment