கல்முனை தேசிய இளைஞர் விளையாட்டு கழகம் வரலாற்று சாதனை படைத்தது

30வது தேசிய இளைஞர் உதைப்பந்தாட்ட போட்டியில் அம்பாறை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி கல்முனை பிரதேச தேசிய இளைஞர் விளையாட்டு கழகத்தினர்
வெற்றிபெற்றனர்.

நேற்று(23) பதுளை வின்சென்ட் டேஸ் மைதானத்தில்

நடைபெற்ற அரை இறுதிப்போட்டியில்
காலி மாவட்ட இளைஞர் அணியுடன் மோதி
இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இறுதிப்போட்டி அடுத்த மாதம் மாத்தறையில் நடைபெற இருக்கும்  தேசிய விளையாட்டு போட்டியில் நடைபெறவுள்ளது

மேலும்  30 வது தேசிய இளைஞர் உதைப்பந்தாட்டபோட்டியில் அம்பாறை மாவட்ட அணி இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் தடவையாகும்.கடந்த 2016 ஆண்டு அம்பாறை மாவட்ட இளைஞர் அணி மூன்றாம் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment