மீண்டும் அழிவுப்பாதையை நோக்கி அழைத்து செல்லும் இனவாதம்

“காலத்தின் தேவை “
இப்போது தமிழர் அரசியல்பாதை மீண்டும் இனவாதத்தை நோக்கி இழுக்கப்படுகிறது.இதற்கு புலிகளை பந்தாகப் பாவிக்கப் போட்டி நடக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் கஜேந்திர குமாரின் காங்கிரசும் யார் புலிகளின் விசுவாசிகள் எனக் காட்டும் போட்டி கடுமையாகவுள்ளது.

இதன் காரணமாக புலிகளின் படுகொலைகள்,அராஜகங்கள் யாவையும் மூடி மறைக்க பலர் முயலுகிறார்கள்.அந்த அமைப்பை புனிதப்படுத்தும் முயற்சி நடக்கிறது.இப்போது புலிகளின் கொலைக்கு நேரடியான ஆதாரங்களை சாட்சிகளை முன்வைக்குமாறு சவால் விடுகிறார்கள்.

புலிகளால் படித்தவர்கள்,பாமர மக்கள் இஸ்லாமியர்கள்,சிங்கள மக்கள் என எல்லோருமே பாதிக்கப்பட்டார்கள்.அனைத்து ஆயுத அமைப்புக்களும் பாதிகப்பட்டன.ஆனால் இப்போது எல்லோரும் மௌனமாக இருக்கிறார்கள்.சித்தார்த்தன்,சுரேஷ்,அடைக்கலநாதன்,டக்ளஸ்,சந்திரகுமார் என எவருமே வாய் திறப்பது இல்லை.இதற்கான விலையை அனைவரும் விரைவில் செலுத்துவார்கள்.

இப்போது பேராசிரியர் ராஜினி திராணகம அவர்களை புலிகள் கொல்லவில்லை.ஈ.பி.ஆர்,எல்,எப் ஏகொன்றது அதுவும் சுரேஷ் பிரேமசந்திரன் மேல் பழிவிழுத்த முயல்கிறார்கள்.சிலர் காத்தான் குடி படுகொலைகளை புலிகள் செய்யவில்லை.இலங்கை இராணுவமே செய்ததென வாதிடும் நபர்களும் இருக்கிறார்கள்.

உண்மைகளைப் புதைத்து புலிகளை,புலிகளின் அராஜகங்களை மறைக்கும் முயற்சிகள் நடக்கின்றன.அதே நேரம் தமிழர்களின் அரசியல் இனவாதம்,மதவாதம் இரண்டையும் ஒன்றாகக் கலக்கிறது.இதன் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும்.

இப்போது புலிகள் மூலம் உறவுகளை இழந்தவர்களின் விபரங்களை திரட்டவேண்டிய தேவைகள் உண்டு.புலிகளால் எத்தனை ஆயிரம் தமிழ் மக்கள்,இஸ்லாமிய மக்கள்,்சிங்கள மக்கள் கொல்லப்பட்டார்கள்? எப்படியான சித்திரவதைகளால் கொல்லப்பட்டார்கள் என்ற விபரங்களை சேகரிக்க வேண்டும்.புலிகளால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் விபரங்கள் வெளியே வரவில்லை.அதற்கு யாராவது முன்வரவேண்டும்.

இன மதவெறி சாதிவெறி கொண்ட சிறீதரன்,கஜேந்திரகுமார் போன்றவர்களும் கூடவே சுமந்திரனும் புலிகளை வைத்து இனவாத அரசியலை முன்னெடுக்க முயல்கிறார்கள்.இது தடுக்கப்பட வேண்டும்.ஒரு ஆபத்தான நிலைக்கு இலங்கை மீண்டும் செல்கிறது.

புலிகள் கொலைகார கும்பல் என்பதற்கான ஆவணங்களை ஒவ்வொன்றாக திரட்டவேண்டியது காலத்தின் தேவை.இதை மைக்கல் பற்குணம் தொடங்கி ஆவணப்படுத்த வேண்டும்.”

BY Vijaya Baskaran

பஸீர் ஷையத்

Related posts

Leave a Comment