ஒடுக்கும் ஒரு அரசாங்கத்திற்கு எதிராக மக்களும், அரசியல் பிரதிநிதிகளும் வீதியில் இறங்கி , வெகுஜன தளத்தில் தமது “அடையாள எதிர்ப்பினை” காட்டுவதை இன்றைய அரசியல் சூழலில் இன்றியமையாத ஒரு ஜனநாயக முன்னெடுப்பாகவே கருதப்படுகின்றது. தென்னிலங்கையில் சிங்கள மக்களும், மாணவர்களும், தொழிற்சங்க அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், இன்றைய அரசாங்கத்திற்கு எதிராக , வெகுஜனத் தளத்தில் போராடியே வருகின்றனர்.
இன்றைய இனவாத மேலாதிக்க அரசாங்கத்தின் கபடத் திட்டங்களால் அண்மைக்காலமாக மிக மோசமாக, திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்படும் கிழக்கு மாகாணத்தின் அரசியல் , நிர்வாகம் மற்றும் நிலம் தொடர்பான விவகாரங்களுக்காகவும், நீண்டகாலமாக தமிழ் , முஸ்லிம் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்காகவும், அம்மக்களின் மீதான அரச , இனவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் , தமிழ் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகளால் இன்று தொடங்கப்பட்டுள்ள , இந்த ஜனநாயக வெகுஜனப் போராட்டம் பாராளமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களினால் பொத்துவிலில் இருந்து கல்முனையை வந்தடைந்தது இதில் பெருமளவில் முஸ்லிம்களும் இணைந்துகொண்டு இருந்தனர், இதன் போது மக்களுடன் மக்களாக சேர்ந்துகொண்ட சில தமிழர்கள் வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்து என்று கோசமிட்ட இப்போராட்டத்தில் கலந்துகொண்ட இன ஒற்றுமையை விரும்பும் தமிழ், முஸ்லிம் மக்களிடையே தர்மசங்கடமான நிலையை உருவாக்கினர். இதன் பின்னனியில் ஒரு பெளத துறவியும் அரசசார்பு தமிழ் கட்சிகளின் முகவர்களும் இருப்பதாக போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் அதருப்தியுடன் கல்முனையில் உள்ள 25 வீதமான தமிழர்கள் 75 வீதமான முஸ்லிம்களுடன் வாழவிரும்பாவிட்டல் இணைந்த வட-கிழக்கில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் எப்படி இணைந்து வாழ்வார்கள் என்று கூறியவாறு தமிழ் தேசியத்தின் துரோகிகளிப் செயல்பாடுகளை கண்டித்து கலைந்து சென்றதை காணக்கூடியதாக இருந்தது.
