கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பாக அமைச்சர் சமல் ராஜபக்சவுடன் கருணா அம்மான் கலந்துரையாடல்

பிரதமரின் மட்டு – அம்பாறை மாவட்ட இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) இன்று (02) கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்துவது சம்பந்தமாக இன்று துறைசார்ந்த அமைச்சர் சமல்ராஜபக்ச கருணா அம்மானை சந்தித்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன் பிரகாரமாக உடனடியாக எல்லை நிர்ணய குழுவை அனுப்புவதாக வாக்குறுதி அழித்துள்ளார் அதுமாத்திரம் அல்ல கணக்காளரை நியமிக்கும் படி கருணா அம்மான் கேட்டு இருந்தார் அதையும் நிவர்த்தி செய்வதாக வாக்குறுதி வழங்கினார் அத்தோடு இதற்கான விளக்கம் மிகவும் சிறந்த முறையில் அவருக்கு அளிக்கபட்டது காரணம் என்னவென்றால் ஜனதிபதி மற்றும் பிரதமர் அவர்களும் கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தனர் கல்முனையை தரம் உயர்த்தி தருவோம் என்று.

ஆகவே இதற்கான சகல ஆவணங்களும் அமைச்சரிடம் வளங்கபட்டிருக்கின்றது அதை மிகவும் தெளிவாக ஆராய்ந்து அதற்கான நடவடக்கைகளை மேற்கொள்ளுவதற்கு பணித்துள்ளார். கருணாம்மான் கடந்த காலத்தில் அமைச்சராக இருந்தபோது கித்துள் உறுகாம குளம் இணைப்பு விடயம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்த விடயம் சம்பந்தமாகவும் உரையாடபட்டது அதற்கான தெளிவான ஆவணம் அமைச்சரிடம் கையளிக்கபட்டது இதற்கான நிதியை கடந்த காலத்தில் பிரான்ஸ் அரசாங்கத்திடம் இருந்து பெறுவதாக திட்டம் இடப்பட்டிருந்தது கடந்த மைத்தரி ரணில் அரசாங்கத்தின் மந்தநிலை காரணமாக முன்னெடுக்க முடியாது இருந்தது எனவே மட்டகளப்பு கித்துள் உறுகாம பொறியியளாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று அது சம்பந்தமான ஆவணங்களும் அமைச்சரிடம் வழங்கபட்டது அவர் உடனடியாக கருணாம்மான் முன்னிலையில் ஜனாதிபதியுடன் உரையாடி அவ் திட்டத்திற்கான நிதியை பெற்றுதருவதாக கூறினார்.

மேலும் ஏனைய பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலாலர்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடபட்டது அதே போன்று மட்டகளப்பு மாவட்டத்திலே அமைக்கப்படுகின்ற கச்சேரி முடிவுறா நிலையில் இருக்கின்றது அந்த கட்டிட தொகுதியினை முடிப்பதற்காக ஒப்பந்தகாரர்களையும் நேரடியாக அழைத்து சென்று அதை முடிப்பதற்கான திட்டத்தினையும் தற்பொழுது கருணாம்மான் ஏற்படுத்தி கொடுத்துள்ளார் ஆகவே கச்சேரி கட்டிடத்தினையும் பூர்த்தி செய்து தருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.

Related posts

Leave a Comment