கல்முனை வர்த்தக சங்கத்தினால் 07 மில்லியன் நிதி உதவி

(எம்.எம் ஜெஸ்மின்)

உலகின் வல்லரசுகள் முதல் இலங்கை வரை ஸ்தம்பித்து வைத்திருக்கும் கோவிட்- 19 (கொரோனா வைரஸ்) தொற்றின் வேகம் காரணமாக பிரகடனம் செய்யப்பட்ட ஊரடங்கு கட்டளை, மற்றும் கொரோனா தாக்கம் காரணமாக அன்றாட வாழ்வாதாரத்தை இழந்த மக்களின் பசியை போக்கும் வகையில் கல்முனை வர்த்தக சங்கம் சுமார் 70 இலட்சத்திற்கு மேற்பட்ட நிதியினை கல்முனை பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்களிடம் இருந்து அறவிடுசெய்து கல்முனை பிரதேசத்தில் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு வழங்கி வைத்தனர்

அந்த வகையில் இச் செயற்திட்டத்தினை கல்முனை வர்த்தக சங்கத்தினர் 3 கட்டங்களாக செயற்படுத்தி வருகின்றனர். அதில் கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத்திட்டத்தில் உள்ள மக்களுக்கு ரூபாய் 968,000 நிதியும், கல்முனை இஸ்லாமாபாத் மக்களுக்கு ரூபாய் 750,000 நிதியும் பள்ளிவாசல்கள் ஊடாக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கல்முனைக் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு அங்குள்ள 19 பள்ளிவாசல்களின் ஊடாக இன்று(6) நிவாரணத்திற்கான நிதி வர்த்தக சங்க தலைவர் கே.எம் சித்தீக் அவர்களின் தலைமையில் கல்முனை மாநகர சபை சபா மண்டபத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம் நஸீர், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளும் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான பெறுமதிமிக்க நிவாரண உதவியினை சிறப்பான முறையில் வழங்கிய கல்முனை வர்த்தக சங்கத்தினருக்கும், அவர்களுக்கு பணங்களை வழங்கிய அனைத்து வர்த்தகர்களுக்கும் நன்றிகளையும்,பாராட்டுகளையும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

Leave a Comment