அரவிந்த் கெஜிரிவாலின் இன்னுமோர் முகம்.

டெல்லி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே எழுத நினைத்தேன் ஆனால் எல்லோரும் ஒரு திசையில் போகும்போது நாம் மாற்றமாப் போக வேண்டாம் என அமைதியாகிவிட்டேன் ஆனால் இன்று தேர்தல் முடிந்து முடிவும் வந்துவிட்டதால் எழுதுகிறேன்!

டெல்லியில் பாஜகவை ஆம்ஆத்மி வென்றதால் நாட்டிற்கும் மதச்சார்பின்மை மற்றும் இஸ்லாமிய சமூகத்திற்கும் ஏதோ விடிமோட்சம் பிறந்துவிட்டதுபோல பலர் புலங்காகிதம் அடைகின்றனர் ?

ஆனால் உண்மையில்…..

அரவிந்த் கெஜிரிவாலுக்கும் அமீத்ஷாவிற்கும் ஊசி முனையளவே வித்தியாசம் !

ஆமாம் பயங்கரவாத பாஜக அரசு தங்களின் ஐடியாலஜியின் அடிப்படைத் திட்டங்களான

காஷ்மீரின் 370 சிறப்பு அந்தஸ்து நீக்கம்

இஸ்லாமியர்களுக்கு எதிரான முத்தலாக் தடைச்சட்டம்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்திருத்தம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்திருத்தம் ஆகியவற்றிர்க்கு முழு ஆதரவுக் கொடுத்தது!

டெல்லி JNU மற்றும் ஜாமிய மாணவப் போராட்டம் மற்றும்

அந்த மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு, காவி காடையர்களின் கொலைவெறி தாக்குதல் ஆகியவற்றைக் கண்டுக்கொள்ளாதது.

CAA NRC NPR க்கு எதிரான பெண்களின் போராட்டகளமான “ஷாஹின்பாக்”கின் பக்கம் டெல்லியின் முதல்வராக இருக்கும் கெஜிரிவால இதுவரை எட்டிக்கூடப் பார்க்காததுப் போன்ற அவரின் நடவடிக்கைகள் இவரைப்பற்றி நல்லெண்ணம் கொள்ள வைக்கவில்லை !

அந்த வகையில் மதவெறி எனும் கழுதையின் முதல் விட்டைகள் அமீத்ஷாவும் மோடியும் என்றால் அரவிந்த் கெஜிரிவால பின் விட்டை அவ்வளவே!

Related posts

Leave a Comment