பனிப் பாறை சரிவில் சிக்கி 50 பேர் பலி துருக்கியில் சம்பவம்.

துருக்கியின் வான் மாகாணத்தில் பனிப்பாறை சரிவில் சிக்கி பலர் பலியாகி உள்ளனர்,

பனிப்பாறை சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட மீட்பு பணியாளர்களும் அவர்களுக்கு உதவச்சென்ற பொதுமக்களும் தொடரும் கடுமையான பனிப்பொழிவில் சிக்கி காணாமல் போயுள்ளார்கள், சம்பவ இடத்துக்கு விரைந்த மேலதிக மீட்பு படையினர் கடும் பனிப்பொழிவுக்கும் மத்தியிலும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

இதுவரை 8 பேர்களின் சடலங்களை மீட்பாளர்கள் கண்டெடுத்துள்ளார்கள், எஞ்சியோரை தேடும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. இதுவரை 50 பேர் வரை பலியாகி இருக்கலாம் என துருக்கியின் உள்நாட்டு அலுவல்கள் அமைசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அல் ஜஸிரா.

Related posts

Leave a Comment