புகைப்பட கலை தோன்றிய வரலாறு.

காலங்கள் ஓடினாலும் நினைவுகளை சுமந்து திரியும் ஒரு பொருள் புகைப்படம். நாம் அன்றாட வாழ்வில் பல நினைவுகளை சுமந்து செல்கின்றோம், அதை பின்னர் திரும்பிப் பார்ப்பதும் பிறருக்கு சொல்வதுவுமாய் விளங்கும் புகைப்படங்களால் நம்முள் ஏற்படும் மகிழ்விற்கு அளவுகோலே இல்லை. புகைப்படம் என்பது  தற்போது ஒரு பெரும் பொழுதுபோக்காய் மாறிவிட்டபோதிலும் அதன் மதிப்பு என்றுமே மாறாதது. நினைத்தபொழுது படம்பிடித்து நினைத்தவாறு பயன்படுத்தும் அளவு இன்றைய நாளில் புகைப்படம் என்ற சொல் மலிவாகிக் கிடக்கிறது. இந்தத் தலைமுறையின் விரல் நுனியில் இருக்கும் புகைப்படங்கள் போன தலைமுறைகளுக்கு ஒரு கனா!

சிறுவயதில் காகிதத்தை மடித்து நிழற்கருவி செய்து நண்பனுடன் பல பொய் பாவனைகளை அச்சிட்டு விளையாடுவோம், அந்த பிம்பம் பிறருக்கு தெரியாத மாயக்கண்ணாடியே. நாளடைவில் திருவிழாக்களில் விற்கும் போலி நிழற்கருவி வாங்க தந்தையுடன் அடம்பிடித்து அதனைக்கொண்டு ஊர் முளுவதும் ‘நானும் ஒரு கேமராமேன்தான்’ பாத்துகோங்க என்ற பாணியில் சுற்றிவருவது ஒரு தனி சுகம். உற்றார் சுபநிகழ்வில் போட்டோக்களில் ஓர் மூலையிலேயாவது நம் முகம் தெரிந்துவிடவேண்டி முன்வரிசையில் முண்டியடித்து நிற்க, அந்தப் புகைப்படத்திற்கென்றே நமது முகம் கொடுத்திருக்கும் பாவம் இருக்கிறதே…
இப்படிப் புகைப்படங்களுக்குள்ளும் புகைப்படக் கருவிகளுக்குள்ளும் எமக்கிருக்கும் கிறக்கத்திற்குப் பின்னால் பலரின் முயற்சியும் பங்களிப்பும் இருக்கிறது. பலநூற்றாண்டுகளுக்கு முன்பே ஒளி-ஓவியம் துவங்கி இருக்கிறது. கி.மு 350களில்வாழ்ந்த அரிஸ்டாட்டில் எனும் கிரேக்க தத்துவஞானி ஊசித்துளை புகைப்படகருவியின் (Pinhole Camera)தத்துவத்தை கூறியுள்ளார். இதுவே ஓர் காட்சியை புகைப்படம் ஆக்க செய்யப்பட்ட முதல் முயற்சி ஆகும். பின் கி.மு 390 களில் வாழ்ந்த மோஸி எனும் சீன தத்துவஞானி புகைப்படக்கருவியின் அப்ஸ்கியூரா (Camera Obscura) எனும் கோட்பாட்டை விளக்கிக் கூறினார். இந்தக் கோட்பாடுகள்தான் புகைப்படக்கருவி கண்டுபுடிப்புகளின் விதையாக இருந்துள்ளன.

பின்னர் கி.பி 13ம் நூற்றாண்டின் பிற்பகுதில் புகைப்படக்கருவியின் அத்தியாயம் புதிய பரிணாமத்துடன் துவங்கியது . அதன்பின் பலரின் முயற்சியில் பெரியதும் சிறியதுவுமாய் பல கருவிகள் கண்டுபுடிக்கபட்டன. நவீன கண்டுபிடிப்புக்களுக்கு அச்சாரமாய் 1825ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோசப் நிஸ்போர் நீப்ஸ் என்பவர் ஒரு கட்டிடத்தின் பிம்பத்தை தனது கருவியில் புகைப்படம் எடுத்தார். ஆனால் அது சிறிது நேரத்தில் தானாகவே அழிந்து விட்டது. பின்பு 1836ஆம் ஆண்டு சர் ஜான் ஹெர்சன்என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ் படங்களை எடுத்தார். அவர்தான் இக்கலைக்கு ஃபோட்டோகிராஃபி என பெயர் வைத்தார். அதன் பொருள் கிரேக்க மொழியில் ஒளியினை பதித்தல் என்பதாகும். மேலும் அடுத்த முயற்சியாய் சில்வர் காப்பரை கொண்டு புகைப்படம் எடுக்கும் முறையினை 1836ம் ஆண்டில் லூயில் டார்க் என்பவர் அறிமுகப்படுத்தினார். மரத்திலான இக்கருவியில் முன்புறத்தில் குவிவாடி பொருத்தப்பட்டிருந்தது. ஃடிகாரோடைப் (Daguerreotype)* என பெயரிடப்பட்ட இக்கருவிக்கு மிகுந்த பிரபலம் கிடைத்தது. இதற்கு பிரான்ஸ் அறிவியல் அறக்கட்டளையானது ஒப்புதல் தந்து, 1839ம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று அதனை வாங்கி அதனை பிஃரி டூ தி வேர்ல்ட் (Free To The World) என அறிவித்தது.

அதன் பிறகு புகைப்பட சாதனங்கள் அதிவேகவளர்ச்சி பெற்றன. 1849ல் பிரிட்டனை சேர்ந்த வில்லியம் ஹென்றி பாஃக்ஸ் என்பவர் கேலோடைப் எனும் சாதனத்தை அறிமுகம் செய்தார். பின்பு 1851ல் பெர்டிக்ஸ் கார்ட் என்பவர் சில்வர் நைட்ரேட் மூலம் இயங்கும் மான்ஹொவொவின்(Monckhoven) ரக புகைப்படக் கருவியை கண்டறிந்தார்.நாம் சில ஆண்டுகளுக்கு முன் உபயோகித்த பிலிம் முறை புகைபடக்கருவிகளின் கண்டுபிடிப்புகள் 1880களில் ஹனிபெல் குட்வின் மற்றும் இஸ்ட்மென் கொடாக்என்பவர்களால் துவங்கின. செல்லூலர் பிலிம்களை கொண்டு இயங்கும் கருவிகளும் தயாரிக்கப்பட்டன.
இம்முறையில் செல்லுலாஸ் நைட்ரேட் பயன்படுத்தபட்டன. பின்பு ஜார்ஜ் இஸ்டமென் என்பவர் பேப்பர் பிலிம்களை கொண்டு ஃபாக்ஸ் கருவிகளில் புகைப்படம் எடுக்கும் முறையை கண்டறிந்தார். 1900ம் ஆண்டுகளில் ஃபாக்ஸ் பௌர்னி (Box Brownie) புகைப்படக்கருவிகளை இஸ்ட்மென் கொடாக் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.


கறுப்பு வெள்ளை புகைப்படங்களை தொடர்து கலர் படம் மற்றும் டிஜிட்டல் உலகத்தை நோக்கி பயணப்படுகிறது போட்டோகிராபி. 1913 களில் ஆஸ்கர்ப் பர்னக் என்பவர் 35mm  ஸ்டில் கேமராக்களை வடிவமைத்தார். இதன் பின் கையடக்க புகைப்படக்கருவிகளின் பயன்கள் முழுமைபெற ஆரம்பித்து முதல் டிஜிட்டல் புகைப்படக்கருவியை இஸ்ட்மென் கொடாக் மற்றும் ஸ்டீவ் ஜான்சன் என்பவர்கள் 1975ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினர். இதுவே டிஜிட்டல் கேமராக்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. பல மேம்படுத்தல் தற்போது வரை நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
‌ஒளி-ஓவியத்தின் பரிணாம வளர்ச்சியானது பத்தாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது. அக்காலத்தில் வாழ்ந்த இப்ன்-அல்-ஹைதம்என்பவர் ஒரு பொருளின் மீது படுகின்ற ஒளி திரும்பலடையும் எனவும், அந்தக் கணம் காட்சி புலப்படும் என்பதையும் விளக்கினார்.

 • இவரே ஒளியியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். 
 • அதன்பிறகு முதல் உருவப்படத்தை ராபர்ட் கர்னேலியஸ் (1839ல்) என்பவரால் எடுக்கப்படுகிறது. இதுவே முதல் தாமி (Selfie) ஆகும். 
 • ராணி விக்டோரியா மற்றும் இளவரசர் ஆல்பர்ட் ஆகியோரின் திருமணத்தில் ரோஜர் பென்டோன் என்பவரால் எடுக்கபட்டதே உலகின் முதல் திருமணப் புகைப்படமாகும் (1854). 
 • முதல் கலர் புகைப்படமானது தாமஸ் சுடான் என்பவரால் 1861ல் எடுக்கபட்டது. இது, முதல் ஒற்றை ஆடி பிரதிபலிப்பு (single-Lens reflection) புகைப்படம் ஆகும். முதல் நகர்தல் புகைப்படம் (Motion Picture) 1878ம் ஆண்டு எட்வர்ட் மைபிரிட்ஜ் என்பவரால் எடுக்கப்பட்டது.
 • ‌முதல் பிலிம் ரோல் 1884இல் கொடாக் நிறுவனத்தால் அறிமுகபடுத்தபட்டது. 
 • முதல் வனவிலங்கு புகைப்படம் 1906ல் ஜார்ஜ் சிராஸ் என்பவரால் எடுக்கபட்டது. 
 • முதல் கேண்டிட் புகைபடங்கள் 1930ஆண்டில் எர்விக் சாலமன் என்பவரால்  எடுக்கப்பட்டது.
 • முதல் சேமிப்பான்தட்டு (Memory Card)ரோலன் முரேனோ என்பவரால் 1977ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தபட்டது.
 • முதல் உயர் விளக்கை (Bounce Lights)கொண்டு எடுக்கும் புகைபடங்களை 1956ல் சுப்ரடா மித்ரா என்பவர் அறிமுகப்படுத்தினார். 
 • அலைபேசி மூலம் எடுக்கும் புகைப்படங்களை 1997ம் ஆண்டுகளில் பிளிப்ஃகான் என்பவர் முதன்முதலில் கண்டுபிடித்தார்
 • ‌முதல் உயர் மாறும் வரம்பு (High Dynamic Range) கேஸ்டே லே கிரேவ்என்பவரால் ஆறிமுகப்படுத்தப்பட்டது. இவரே HDRன் தொழில்நுட்பத் தந்தையாக கருதப்படுகிறார். 

புகைப்படத்திற்கு காலத்தை நிறுத்தும் வலிமைகூட  உண்டு நம்மால் இயலாததை இயலும் என காட்டும் சுடராய் இருப்பதுமுண்டு. ஒளிஓவியம் காலத்தினால் மாறாதது ஆனால் பல காலத்திற்கும் நம்மை இட்டு செல்ல வலியது…..

Related posts

Leave a Comment