கத்தாரில் வீசா மோசடியில் ஈடுபட்ட 9 பேர் அடங்கிய கும்பல் அதிரடிக் கைது!

கத்தாரில் வீசா விற்பனையில் ஈடுபட்டு வந்த 9 பேர் அடங்கிய கும்பலை கத்தார் உள்துறை அமைச்சின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தேடல் மற்றும் பின்தொடர்தல் திணைக்கள அதிகாரிகள் கத்தார் முழுதும் போலிக் கம்பனிகளின் பெயரில் வீசா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றது. அந்த வரிசையில் வீசாக்களை விற்பனை செய்து வந்த 9 பேர் கொண்ட கும்பல் சிக்கியுள்ளது. இவர்களில் ஆபிரிக்க நாட்டவர்களும், இலங்கையை சேர்ந்த நால்வரும் உள்ளடங்குகின்றனர். வீசா தொடர்பான விளம்பரத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த நிலையில் இந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்களுடன் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் முத்திரைகள், அடையாள அட்டைகள், வங்கி அட்டைகள், மற்றும் பெருந்தொகையான பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

Leave a Comment