அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி இரு தளங்கள் மீது தாக்குதல்.

ஈரானின் அல் குத்துஸ் இராணுவ படை தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்க்கு ஈரான் பதிலடி. ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க தளங்கள் இரண்டை குறிவைத்து ஏவுகணைத்தாக்குதல்.

ஈரானில் அமைந்துள்ள அல் அஸாட் ஏவுகணைத்தளத்தில் இருந்து 17 ஏவுகணைகளை ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க தளங்கள் இரண்டை குறிவைத்து ஏவப்பட்டன.

இத்தாக்குதலில் இத்தளங்களுக்கு பாரிய சேதம் ஏட்பட்டுள்ளதாகவும் 80 அமெரிக்க துருப்பினர் கொல்லப்பட்டதாகவும் 100 மேற்பட்டோர் காயமுற்றுள்ளதாகவும் ஈரான் தரப்பு கூறுவதுடம் தாக்குதலுக்கும் ஈரானின் புரட்சிகர இராணுவப் படை உரிமை கோரியுள்ளது, மேலும் அமெரிக்கவின் நலன்பேனும் இராணுவத் தளங்கள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் தாக்குதல் நடைபெரும் என்றும் எச்சரித்துள்ளது.

இதேநேரம் 22 ஏவுகணை வெடிப்பு சத்தங்கள் கேட்ட்தாத ஈராக்கிய இரானுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதில் 17 ஈரானிய புரட்சிகர இராணுவத்தினால் உரிமை கோரப்பட்டுள்ளதுடன் 5 வெடிப்பு சம்பவங்கள் பற்றிய மர்மம் இதுவரை வெளிப்படுத்தப்பட உள்ளது.

இதேவேளை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் இத்தாக்குதலை உறுதிப்படுத்தி உள்ளதுடன் சேதவிபரங்கள் எதனையும் தெரிவிக்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment