சுனாமி பேரலை – உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்திக்காக மத வழிபாடுகள் இடம்பெற்றன.

நாட்டின் பல பிரதேசங்களில் சுனாமி கடற் பேரலையினால் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்திக்காக மத நிகழ்வுக் இடம்பெற்றன.

கடந்த 2004 ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்த உறவினர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு உறவுகளால் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

பிரதான சமய நிகழ்வு ஹிக்கடுவவில் உள்ள தெல்வத்த சுனாமி நினைவு தூபிக்கு அருகில் நடைபெற்றது. இந் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அரச அதிகாரிகள் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.  இதேவேளை காலை 9.25 இல் இருந்து இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சுனாமி அனர்தத்தில் சிக்குண்ட ரெயிலில் பயணித்தவர்களை நினைவு கூரும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட குறித்த ரெயில் இன்று காலை தெல்வத்த பிரதேசத்தை நோக்கி பயணித்தது.

யாழ்ப்பாணத்தில் வடமராட்சி கிழக்கு, உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் முற்பகல் 9.35 மணிக்கு ஆழிப் பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு உறவுகள் மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதேவேளை கல்முனையில் கடற்கரை பள்ளிவசலில் உயிரிழந்த உறவினர்களின் நினைவு தின நிகழ்வு கலை 9 மணியளவில் காத்தமுல் குரானும் விஷேட துஆ பிராத்தனையும் பெருமக்கள் பங்களிப்புடன் இடம்பெற்றது.

சுனாமி பேரனத்தத்தால் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment