இரண்டு துரோகங்கள் தந்த வலிகள்.

 

1990 ஒக்டோபர் 30இன் விடியலை யாழ் முஸ்லிம்கள் சூரிய உதயமென்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால், அச்சிவப்பின் பின்னணியில் குருதிவாடை வீசி அம் மக்களின் வறுமை, விரக்தி, வாழ்வழிப்பு, வெளியேற்றம் போன்ற பல நினைத்தும் பார்க்க முடியாத அராஜகங்கள் இடம்பெற்று அழிக்கமுடியாதா கரும்புள்ளியாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

விடுதலை வேண்டி போராடும் ஒரு இனம் மற்றுமொரு இனத்தினை விடுதலை போராட்டத்தின் பெயரால் திட்டமிட்டமுறையில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலிருந்து வன்முறையால் அல்லது பயங்கரவாதத்தால் அழித்தொழித்தல் அல்லது வெளியேற்றுதல் ‘இனச்சுத்திகரிப்பு’ எனப் பொருள்பட்டால், 1990 ஒக்டோபர் 30இல் முஸ்லிம்கள் 2 மணித்தியாலயத்தில் தம் பிறப்பிட பூமியிலிருந்து தங்கள் உடமைகள பறிகொடுத்து விரட்டப்பட்டதும் இனச்சுத்திகரிப்பே என்பதில் யாருக்கும் ஐயமில்லை.

1990 ஒக்டோபர் 30 காலை 6 மணி….

வீதியெங்கும் விடுதலைப் புலிகளின் ஒலிபெருக்கிகள் அலறின. அவர்களின் அறிவிப்பிற்கேற்ப முஸ்லிம் ஆண்கள் யாழ். ஜின்னா மைதானத்திற்குச் செல்ல…

முஸ்லிம் பெண்கள் கண்ணீரோடு ஆண்களை வழியனுப்பி வைத்தார்கள். அந்தக் கணங்கள் யாரும் அறிந்திருக்கவில்லை. அந்த அழைப்பு அம் மக்களின் அகதி வாழ்க்கைக்கான ஒரு முகப்பென்று.

ஏறத்தாழ ஒரு மணித்தியாலம் நடைபெற்ற விடுதலைப்புலிகளின் கூட்டம் முஸ்லிம்கள் இரண்டு மணித்தியாலத்தில் யாழ்ப்பாணத்தை விட்டுச் செல்ல வேண்டுமென முரசறைந்தது. உடுத்திய உடையுடன் நாங்கள் துரத்தப்பட்டபோது அம்மக்களின் பாதம் பட்ட வீதிகள் மக்களின் கண்ணீரால் நிறைந்தது.

யாழ் முஸ்லிம் பகுதிகளில் அழுகைச் சத்தம் ஆக்ரோஷமாக வெடித்து விண்ணை பிளந்தது.
இச் செய்தி கேள்வியுட்ட மனித நேயம் விரும்பும் மக்கள் இன, மத, மொழி வேறுபாடின்றி கண்ணீர்வடித்தனர்.

அக்கணங்களை எண்ணும் போது அக்கொடுமையான நிகழ்வின் தாக்கம் இன்னும் வலியோடு எமக்குள் அதிர்கின்றது.

போர் ஓய்ந்த பின்னும் துரோகம் தந்த வலி ரனமாக இன்னும் அவர்களின் வாழ்விடம் மறுக்கப்பட்டு தொடர்கிறது.

இந்நிகழ்வுகள் இடம் பெற்றது ஐ தே க அரசின் ஆட்சிகாலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியான ரனசிங்க பிரமதாசா (சஜித்தின் அப்பா)அவர்கள் முப்படைகளின் தளபதியாக இருந்தும் இம்மக்களின் வெளியேற்றத்தை வேடிக்கை பார்த்ததை தவிர குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எதுவும் செய்யவில்லை என்பதும் வரலாற்றில் என்றும் வடுவாக உள்ளது.

இத்தனைக்கும் தோல்வியின் விளிம்பில் இருந்த பிரமதாசாவை முஸ்லிம்களின் வாக்குகள்தான் வெற்றியை நோக்கி அழைத்து சென்று அரியாசனத்தில் அமரச்செய்தது.

 

 

Related posts

Leave a Comment