முன்நாள் பாதுகாப்பு செயலாளர் ஹெமஶ்ரீ பெர்ணாண்டோ கைது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமஶ்ரீ பெர்ணாண்டோ குற்றப்புலனாய்வு பிரிவால் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் சம்பம் தொடர்பில் முன்னரே அறிந்திருந்தும் அது தொடர்பில் உரியவர்களுக்கு அறியதராததன் காரணமாக அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதன் பின்னர் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியிருந்தது.

இந்நிலையிலேயே அவர் இன்று கைதாகவிருந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் போதே சற்று முன்னர் கைதாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Leave a Comment