வடமராச்சியில் 8வயது மாணவி தமிழ் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம்.

வடமராட்சியில் பாடசாலையில் வைத்து ஆசிரியரால் மாணவி பாலியல் துஷ்பிரயோகம்

வடமராட்சி கல்வி வலயத்தில் பருத்தித்துறை கோட்ட கல்வி பிரிவில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஆசிரியர் பருத்தித்துறை பொலிஸாரால் 12.06.2019 ம் திகதி கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு 19.06.2019 வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். 19.06.2019 புதன்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட சந்தேக நபரை மீண்டும் 14 நாட்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கெளரவ மன்று உத்தரவிட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை செல்ல மறுத்து அடம்பிடித்த மாணவியை தினமும் வலுக்கட்டாயப்படுத்தி தாயார் பாடசாலை அனுப்பி வைத்த நிலையில் 10 நாட்கள் கழிந்த பின்னரே பெற்றோருக்கு விடயம் தெரிய வந்துள்ளது.

இரண்டு மாணவிகள் சிறுநீர் கழிப்பதற்காக சென்ற போது அதில் ஒரு மாணவியை பிடித்து வைத்து மலசல கூடத்துக்கு பின்புறம் வைத்து மிக மோசமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த பாடசாலையில் ஆண் பெண் கழிப்பறைகள் அருஅருகே இருப்பது சந்தேக நபருக்கு சாதகமாக அமைந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வகுப்பாசிரிடம் சொல்லி விட்டே சிறுநீர் கழிக்க சென்ற இரண்டு மாணவிகளில் ஒரு மாணவி சற்று தாமதமாக வந்து அழுது கொண்டு மேசையில் படுத்ததை வகுப்பாசிரியர் அவதானிதுள்ளார். எனினும் விசேட கவனத்தை செலுத்தி இருந்தால் சம்பவம் உடனடியாக வெளிப்பட்டு இருக்கும்.

குறித்த சம்பவத்தை பெற்றோர் உடனடியாக பாடசாலை அதிபருக்கு எழுத்து மூலமான முறைப்பாடு செய்துள்ளனர். அதிபர் உடனடியாக பொலிஸுக்கு அறிவிக்காது வடமராட்சி வலயக்கல்வி பணிப்பாளருக்கு அறிவித்ததாகவும் அறிய முடிகிறது. வலயக்கல்வி அலுவலகம் வழமை போல பொலிஸுக்கு அறிவிக்காது சம்பவத்தை மூடி மறைக்க பல முயற்சிகள் எடுத்துள்ளனர். தமது விசாரணை குழுவை பெண் மாணவிகளின் பிரச்சனையை அதுவும் இரண்டு ஆண் அதிகாரிகளை அனுப்பி விசாரணை செய்துள்ளனர். சாட்சி மாணவியை கூட பொலிஸார் போல குறுக்கு விசாரணை செய்து சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்துள்ளனர்.

07.06.2019 அறிந்த சம்பவத்தை இதுவரை பொலிஸுக்கு அறிவிக்காது சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி எடுத்து வரும் அதிபர் , உப அதிபர், வலயக்கல்வி பணிப்பாளர், கோட்ட கல்வி அதிகாரி மீது பொலிஸார் தனியான வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவர்களும் சம்பவத்தை பொலிஸுக்கு அறிவிக்காத மற்றும் சாட்சிகளை கலைத்த குற்றத்திற்காக எந் நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

மனமுடைந்து மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரின் ஊடாக சம்பவத்தை அறிந்த வைத்தியசாலை பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவுக்கு அறியப்படுத்தியதை தொடர்ந்து 4 நாட்களின் பின்னர் விடயம் பெற்றோர் ஊடாக பருத்தித்துறை பொலிஸில் 10.06.2019 அன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை நேரத்தில் பாடசாலை வளாகத்தில் 8 வயது சிறுமி மிக மோசமான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கெளரவ நீதிமன்றம் குறித்த வழக்கில் விசேட கவனம் செலுத்தி குற்றத்தை மறைக்க முற்பட்டவர்களையும் கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பலரும் குறித்த சம்பவத்தை கண்டிப்பதுடன் பாரதூரமான சம்பவத்தை மூடி மறைத்த கல்வி அதிகாரிகளையும் கைது செய்ய வலியுறுத்தி வருவதாக அறிய முடிகிறது.

குற்றம் செய்பவனை விட குற்றத்தை மூடி மறைக்க முற்படுவது, சாட்சியங்களை கலைப்பது நீதிவான் நீதிமன்றத்தில் கூட பிணை எடுக்க முடியாத குற்றம் என்பது யாவருக்கும் தெரிந்த சட்டமே.

Related posts

Leave a Comment