அக்கரைப்பற்றில் தாம் சீ.ஐ.டி எனக் கூறி கொள்ளையிட்டவர்கள் கைது, பிரதான சூத்தரதாரி இராணு வீரர்…!

 

தம்மை இரகசியப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் என அடையாளப்படுத்தி அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் சோதனை என்ற பேரில் நேற்று (10) கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபர்கள் மூவரும் இன்று (11) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மேலதிக நீதிவான் நீதி மன்ற நீதிபதியும் மாவட்ட நீதிமன்ற நீதிபதியுமான பி.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் பயன்படுத்திய வேனை அடிப்படையாக வைத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மற்றும் தேடுதலின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்தச் சம்பவத்தின் பிரதான சூத்தரதாரி இராணு வீரர் ஒருவர் என தெரிவிக்கப்படும் நிலையில் அவரைக் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த வீட்டில் காணப்பட்ட பணமும் நகைகளும் பயங்கரவாதி ஸஹ்ரானுடன் தொடர்பு பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகத் தெரிவித்து அவற்றை அந்த வீட்டின் அறை ஒன்றில் வைத்து கொள்ளையர்கள் பூட்டியுள்ளனர். பின்னர் அந்த அறையையும் அங்கிருந்த பெண்களையும் சோதனை செய்வற்கு பெண் பொலிஸாரும் துறைசார்ந்த உத்தியோகத்தர்களும் வீட்டுக்கு வருகை தரவுள்ளதால் குறித்த அறைக்குள் எவரும் செல்ல வேண்டாமென கூறி அதன் கதவை மூடி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையிலேயே அந்த அறையிலிருந்த பணத்தையும் நகைளையும் சூட்சுமமாக கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.

Related posts

Leave a Comment