எல்டீடீயினர் மீதான தடை நீடிப்பு

வளமான தேசங்களைத் துண்டாடும் வகையில் ஆயுதமுனைப் பயங்கரவாதத்தை முன்னெடுத்ததும் உலக பயங்கரவாதப் பட்டியலில் முன்னிலை வகித்ததுமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மீதான தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீடித்திருப்பதாக இந்திய மத்திய அரசு நேற்றைய தினம் (14) பிரசுரிப்பொன்றை வெளியிட்டிருந்தது.

1967ம் ஆண்டின் சட்டவிரோத செயற்பாடுகள் மீதான தடைச் சட்டத்தின் அடிப்படையில் நீடிக்கப்பட்டுள்ள மேற்படி தடையானது, குறித்த அமைப்பானதை இந்திய இறைமைக்கு முற்றிலும் முரணான ஒன்று எனவும், கடந்த கால வரலாறுகள் முதற்கொண்டு இற்றைவரை இந்திய அரசின் தேசிய தலைவர்களுக்குப் பாரிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்திய வகையில் முதன்மையான பயங்கரவாத அமைப்பு என்பதைக் கருத்தில் கொண்ட வகையிலுமே பிரசுரிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

Leave a Comment