வலீமார் திலகம் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜிலானி நினைவாக கல்முனையில் கொடியேற்றம்.

வலீமார் திலகம் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜிலானி நினைவாக கல்முனையில் கொடியேற்றம்.
கெளதுல் அஃழம் வலீமார் திலகம் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜிலானி (றழீ)  அவர்களின்  நினைவாக கல்முனை சுன்னத் வல்ஜமாஅத் இறாக் நற்புறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மஸ்ஜிதுல் பத்ரிய்யஹ் பள்ளிவாசலில் புனிதமிகு தீன்கொடியேற்றம் மற்றும் மவ்லித் மஜ்லிஸ் நிகழ்வும் (8) மிகச்சிறப்பாக நடைபெற்றது.
புனித றபீஉனில் ஆகிர் பிறை 1 முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு மஃரிப் தொழுகையை தொடர்ந்து  வலீமார் திலகம் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜிலானி (றழீ)  அவர்களின் மனாகிப் மவ்லிது மஜ்லிஸ், அவ்லியாஉகளின் அகமியங்கள் பற்றிய உரைகளும் சங்கைமிகு உலமாஉகளால் கல்முனை பத்ரிய்யஹ் பள்ளிவாசலில் நிகழ்த்தப்பட்டும் வருகின்றன.
சங்கைக்குரிய மௌலவீ  எஸ்.வை.எம் அஸ்ஸெய்யிது அஹமது மௌலானாவினால் புனித திருக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன் துஆ பிராத்தனைகளும் நடைபெற்றது. அன்றய தினம் மௌலவீ ஏ முஸம்மில் மன்பயீனால் விஷேட பயான் நிகழ்ச்சியும் நிகழ்த்தப்பட்டதுடன் மௌலவீ ஏ.எல்.எம் பைஸல், ஒன்றியத்தின் தலைவர் S.H.M ஹனிபா, உள்ளூர், வெளியூர் உலமாஉகளும், நிர்வாகிகளும், பெரியார்களும், பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் எதிர்வரும் செவ்வாய் கிழமை மாலை (18) புனித மவ்லித் மஜ்லிஸ் தமாம் செய்யப்பட்டு புனித துஆ பிரார்த்தனைகள் இடம்பெற்று கந்தூரி வழங்கப்படவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக செயலாளர் M.A.M றியால் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment