தெல்லிப்பழை சந்திப்பகுதியில் நடமாடிய நபரிடம் இருந்து 12 கிலோகிராம் மாவா மீட்பு

யாழ்ப்பாணம்  தெல்லிப்பழை    சந்திப்பகுதியில்   சந்தேகத்திற்கிடமான முறையில் முச்சக்கரவண்டியில்  நடமாடிய நபர் ஒருவரிடம் இருந்து  12 கிலோகிராம் மாவா கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்றிரவு(20)வடமாகாண  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் கணேசநாதனிற்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக  தேடுதல் நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ளுமாறு தனது கட்டுப்பாட்டில் உள்ள பொலிஸ் குழுவிற்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த பொலிஸ் குழுவை   சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் உதயானந் தலைமையிலான பொலிஸ் குழு சிவில் உடையில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.
இதன் போது தெல்லிப்பழை சந்திப்பகுதியால்   வந்து கொண்டிருந்த   முச்சக்கரவண்டி ஒன்றினை மறித்து சோதனை செய்த போது 12 கிலோகிராம்  மாவா போதைப்பொருளை அக்குழுவினர் கைப்பற்றினர்.
அத்துடன் முச்சக்கரவண்டியில் மாவா போதை பொருளை கொண்டு சென்ற  யாழ்ப்பாணத்தை சேர்ந்த  41 வயதுடயை நபரும் கைது செய்யப்பட்டார்.
இன்றைய தினம் மீட்கப்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் கைது செய்யப்பட்ட நபர்  காங்கேசந்துறை பொலிசாரிடம் மேலதிக விசாரணைக்காக  ஒப்படைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment