சத்சுருகம கிராமம் மக்களிடம் கையளிப்பு

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொணன்னோருவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சத்சுருகம கிராமம் நேற்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள 138வது கிராமம் இதுவாகும்.

இதில் 26 வீடுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், நீர் மற்றும் மின்சார வடசத்திகள், உள்ளகப் பாதை வசதிகள், பிரவேசப் பாதை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

சத்சுருகம மாதிரிக்கிராமத்தில் 26 குடும்பங்களுக்கு வீடுகளுக்கான உரிமைப் பத்திரம் வழங்கப்பட்டது.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதுடன், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்கவும், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சின் சந்து ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

Related posts

Leave a Comment