கல்முனையில் தமிழ்தேசியத்தின் துரோகிகளால் திசைமாற்றப்பட்ட வெகுஜன போராட்டம்.

ஒடுக்கும் ஒரு அரசாங்கத்திற்கு எதிராக மக்களும், அரசியல் பிரதிநிதிகளும் வீதியில் இறங்கி , வெகுஜன தளத்தில் தமது “அடையாள எதிர்ப்பினை” காட்டுவதை இன்றைய அரசியல் சூழலில் இன்றியமையாத ஒரு ஜனநாயக முன்னெடுப்பாகவே கருதப்படுகின்றது. தென்னிலங்கையில் சிங்கள மக்களும், மாணவர்களும், தொழிற்சங்க அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், இன்றைய அரசாங்கத்திற்கு எதிராக , வெகுஜனத் தளத்தில் போராடியே வருகின்றனர். இன்றைய இனவாத மேலாதிக்க அரசாங்கத்தின் கபடத் திட்டங்களால் அண்மைக்காலமாக மிக மோசமாக, திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்படும் கிழக்கு மாகாணத்தின் அரசியல் , நிர்வாகம் மற்றும் நிலம் தொடர்பான விவகாரங்களுக்காகவும், நீண்டகாலமாக தமிழ் , முஸ்லிம் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்காகவும், அம்மக்களின் மீதான அரச , இனவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் , தமிழ் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகளால் இன்று தொடங்கப்பட்டுள்ள , இந்த ஜனநாயக வெகுஜனப் போராட்டம்…

Read More

கல்முனையில் அனைத்து நிறுவனங்கள், வீடுகளிலும் தேசியக் கொடியை பறக்க விடுமாறு மாநகர முதல்வர் வேண்டுகோள்..!

நாளை 04-02-2021 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கை ஜனநாயக குடியரசின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், கடைகள் மற்றும் வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விடுமாறு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவித்துள்ளதாவது; எமது தேசப்பற்றையும் ஒற்றுமையையும் பறைசாற்றும் வகையில் நாம் அனைவரும் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என்பதை உணர்ந்து கொள்வோம். ஏனெனில் அரசு வேறு, அரசாங்கம் வேறு, அரசு என்பதும் அரசாங்கம் என்பதும் வெவ்வேறானவையாகும். அரசாங்கமானது காலத்திற்கு காலம் மாறக்கூடியதாகும். அரசு என்பது நிலையான இருப்பும் இறைமை கொண்டதுமாகும். இன, மத, கலாசார, மொழி வேறுபாடுகளைக் கடந்து, நாட்டுப் பிரஜைகளை ஒன்றிணைப்பது அரசாகும். இந்த அரசு…

Read More

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பாக அமைச்சர் சமல் ராஜபக்சவுடன் கருணா அம்மான் கலந்துரையாடல்

பிரதமரின் மட்டு – அம்பாறை மாவட்ட இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) இன்று (02) கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்துவது சம்பந்தமாக இன்று துறைசார்ந்த அமைச்சர் சமல்ராஜபக்ச கருணா அம்மானை சந்தித்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன் பிரகாரமாக உடனடியாக எல்லை நிர்ணய குழுவை அனுப்புவதாக வாக்குறுதி அழித்துள்ளார் அதுமாத்திரம் அல்ல கணக்காளரை நியமிக்கும் படி கருணா அம்மான் கேட்டு இருந்தார் அதையும் நிவர்த்தி செய்வதாக வாக்குறுதி வழங்கினார் அத்தோடு இதற்கான விளக்கம் மிகவும் சிறந்த முறையில் அவருக்கு அளிக்கபட்டது காரணம் என்னவென்றால் ஜனதிபதி மற்றும் பிரதமர் அவர்களும் கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தனர் கல்முனையை தரம் உயர்த்தி தருவோம் என்று. ஆகவே இதற்கான சகல ஆவணங்களும் அமைச்சரிடம் வளங்கபட்டிருக்கின்றது அதை மிகவும் தெளிவாக ஆராய்ந்து…

Read More