அதிர்ச்சி செய்தி, இலங்கையில் பாலியல் துஸ்பிரயோக முறைப்பாட்டில் மட்டக்களப்பு முதலிடம்-15 நாட்களில் 44 துஷ்பிரயோகங்கள்

2020ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து 15 நாட்களில் இலங்கையில் 142 பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் மற்றும் 54 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளதாக தரவுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதிலளித்தார். இதன்போதே இந்த துஷ்பிரயோக புள்ளிவிவரங்கள் நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளது இதன்படி, 2020இன் முதல் 15 நாட்களில் 142 துஷ்பிரயோக சம்பவங்கள், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் மற்றும் 54 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடுகளில், 78 துஷ்பிரயோக சம்பவங்கள், 21 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள், 34 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. மேலும், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ்…

Read More

இலங்கைக்கு அருகில் இன்று அதிகாலை நில நடுக்கம்!-சுனாமி முன்னெச்சரிக்கை மையம்!

இலங்கைக்கு அருகில் நில நடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லையெனவும் அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளது. குறித்த நில நடுக்கம் இலங்கைக்கு தென் கிழக்காக இந்து சமுத்திரத்தில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் 5.4 ரிச்டர் அளவில் இன்று 12 ஆம் திகதி புதன்கிமை அதிகாலை 2.34 மணிக்கு பதிவாகியுள்ளது. இதேவேளை, குறுத்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லையெனவும் இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாதி முன்னெச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More