சஹரானின் சகாக்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு..

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஸிமுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 61 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கும்படி மட்டக்களப்பு மாவட்ட மேலதிக மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர். நுவரெலியா உட்பட பல பகுதிகளிலும் தீவிரவாதி சஹ்ரான் நடத்திய ஆயுதப் பயிற்சி முகாம்களில் இவர்கள் கலந்துகொண்டனர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள் 61 பேரையும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

Read More

அரவிந்த் கெஜிரிவாலின் இன்னுமோர் முகம்.

டெல்லி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே எழுத நினைத்தேன் ஆனால் எல்லோரும் ஒரு திசையில் போகும்போது நாம் மாற்றமாப் போக வேண்டாம் என அமைதியாகிவிட்டேன் ஆனால் இன்று தேர்தல் முடிந்து முடிவும் வந்துவிட்டதால் எழுதுகிறேன்! டெல்லியில் பாஜகவை ஆம்ஆத்மி வென்றதால் நாட்டிற்கும் மதச்சார்பின்மை மற்றும் இஸ்லாமிய சமூகத்திற்கும் ஏதோ விடிமோட்சம் பிறந்துவிட்டதுபோல பலர் புலங்காகிதம் அடைகின்றனர் ? ஆனால் உண்மையில்….. அரவிந்த் கெஜிரிவாலுக்கும் அமீத்ஷாவிற்கும் ஊசி முனையளவே வித்தியாசம் ! ஆமாம் பயங்கரவாத பாஜக அரசு தங்களின் ஐடியாலஜியின் அடிப்படைத் திட்டங்களான காஷ்மீரின் 370 சிறப்பு அந்தஸ்து நீக்கம் இஸ்லாமியர்களுக்கு எதிரான முத்தலாக் தடைச்சட்டம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்திருத்தம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திருத்தம் ஆகியவற்றிர்க்கு முழு ஆதரவுக் கொடுத்தது! டெல்லி JNU மற்றும் ஜாமிய மாணவப் போராட்டம் மற்றும் அந்த மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு, காவி…

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேகமாக வளர்ச்சியடையும் நன்னீர் மீன்வளர்ப்பு துறை.

மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தடாக மீன்வளர்ப்பு திட்டத்தின் 2ம் கட்ட மீன் அறுவடை நிகழ்வு 11.02.2020 இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி அலுவலகத்தின் (மாகாணம்) மாவட்ட உத்தியோகத்தர் லோ.பிரதீபன், குறித்த பகுதிக்கு பொறுப்பான நீரியல்வள அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.நேர்த்திராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிழக்கு மாகாண மீன்பிடி பிரிவின் மாகாணப் பணிப்பாளர் சி.சுதாகரன் அவர்களின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவட்ட மீன்பிடி அலுவலகம் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் தடாக மீன் வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 2019ம் ஆண்டு முதல் புதுக்குடியிருப்பில் ¼ ஏக்கருக்கு குறைவான நிலப்பரப்பில் தடாக மீன்வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் முதல் கட்டமாக கடந்த 2019 தை மாதம் 2ம் திகதி 4000 திலாப்பியா மீன்குஞ்சுகளை கடுக்காமுனை சமுதாய அடிப்படையிலான…

Read More

ஒரு கல்லில் மூன்று மாங்காய், அதாவுல்லாஹ், ஹரீஸ், கருணா ….

” வியூகங்கள் வகுப்பதில் மொட்டுக்கு நிகர் மொட்டே தான் “ எனலாம். அந்தளவு அதன் வியூகங்கள் கனமானதாக அமையும். கல்முனை – சாய்ந்தமருது விடயத்தில் அதன் வியூகம் அபாரமானது. இது தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடம்பெற்ற பிரதமர் மஹிந்தவுடனான கலந்துரையாடால் உறுதி செய்கிறது. இது வெற்றி பெற்றால் கணிசமான அம்பாறை மாவட்ட சிறுபான்மை மக்களின் வாக்குகளை மொட்டு கைப்பற்றும். இக் கலந்துரையாடலில் அதாவுல்லாஹ், கருணா, பா.உ ஹரீஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதில் பா.உ ஹரீஸ் தனக்கு அழைப்பு விடுக்கப்படாமலேயே அங்கு சென்றதாக கூறுகின்ற போதும், பிரதமருடனான கலந்துரையாடலில் அழைப்பில்லாமல் யாரும் எளிதில் சென்றிட இயலாது என்பதை அறியாதளவு நாம் சிறுபிள்ளைகளுமல்ல. இதுவே இந் நிகழ்வு அரசியலுக்காக பயன்படுத்தப்படுவதை துல்லியமாக்குகின்றது. அழைப்படாமல் சென்றேன் என்பதன் மூலம் பா.உ ஹரீஸ் சமூகத்துக்காக தன் மானத்தை இழக்கும் தியாகியாக…

Read More

மலேசியாவில் entrepreneur of the Year விருதைப் பெற்றுக்கொண்டார் கல்முனையைச் சேர்ந்த கலாநிதி ஏ.ஆர். முகம்மது ஜிப்ரி

அம்பாறை மாவட்டத்தின், கல்முனையை பிறப்பிடமாக கொண்ட கலாநிதி ஏ.ஆர். முகம்மது ஜிப்ரி, மலேசியாவைச் சேர்ந்த Business World International நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான Entrepreneur of the Year விருதைப் பலத்த போட்டிகளுக்கு மத்தியில் பெற்றுக்கொண்டார்.இவர் Jiffrry’z Gem மற்றும் Green Land Property Developers ஆகிய நிறுவனங்களின் தவிசாளரும், கல்முனை ஸாஹிறா கல்லுரியின் பழைய மாணவரும் Colombo Business Association என்ற அமைப்பின் Patron ம் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்விருது மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 08-02-2020 அன்று நடைபெற்றது. செய்தியும் புகைப்படமும் இம்றான் நைனார்

Read More