கல்முனை வடக்கு செயலகம் தரம் உயர்த்துவதில்நற்செய்தி கிடைத்துள்ளது -கருணா தெரிவிப்பு !

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தும் என்ற விடயத்தில் நற்செய்தி ஒன்று கிடைத்துள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். கல்முனை உப பிரதேச் செயலக முன்றலில் புதன்கிழமை(5) இரவு 10 மணியளவில் கட்சி ஆதரவாளர்களை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு மேற்கண்டவாறு கூறினார். மேலும் தனது கருத்தில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தும் என்ற விடயத்தில் நான் தீவிரமாக செயற்பட்டு வருகின்றேன். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து இதை உடனே தரம் உயர்த்தி தரவேண்டும் என்று அழுத்தமாகக் கூறினேன். இதிலேயே ஒரு நற்செய்தி ஒன்று வந்திருக்கின்றது நாளை(வியாழக்கிழமை(6)) காலை( இன்று ) பாராளுமன்ற குழு கூட்டம் இடம்பெற இருக்கின்றது.…

Read More