மஹர சிறைச்சாலை பள்ளிவாசல் கட்டிடம் அபகரிப்பு

மஹர சிறைச்சாலை பகுதியில் கடந்த 100 வருடங்களாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் பள்ளிவாசல் கட்டிடம் சிறைச்சாலை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டு அங்கு பௌத்த சமய வழிபாடுகள் நடாத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெப்ரவரி ஐந்தாம் திகதி இக்கட்டிடம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு சிறைச்சாலை தலைமையதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமய நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ராகம நகர்ப்பகுதியிலும் பள்ளிவாசல் இல்லாத நிலையில் பிரதேச மக்கள் ஜும்மா மற்றும் அன்றாட தொழுகை, ஜனாஸா போன்ற விடயங்களை மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.  ஜனாதிபதியின் கவனத்துக்கு இதைக் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் சிறைச்சாலை நிர்வாகம், குறித்த இடம் நீண்ட காலமாக கைவிடப்பட்டிருந்த ஒரு கட்டிடம் என விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ராகமையின் அண்மைய ஜனாஸா நிகழ்வுகளுக்குக் கூட தேவையான கழுவும் கட்டில், சந்தக்கு போன்றவற்றை மாபோல பள்ளிவாசலில் இருந்தே பெற்றுக்கொண்டுள்ளதுடன்,…

Read More

சாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி – வெளிவரவே இல்லை என அமைச்சரவையில் சர்ச்சை !

சாய்ந்தமருது நகரசபை பிரகடனமாக வெளியான வர்த்தமானி குறித்து நேற்று அமைச்சரவையில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து – இப்படியான வர்த்தமானி வெளிவந்தமையே தனக்கு தெரியாதென பொதுநிர்வாக அமைச்சர் கையை விரித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று அமைச்சரவை கூடியது. இதன்போது இந்த விடயத்தை பிரஸ்தாபித்த அமைச்சர் விமல் வீரவன்ச , சாய்ந்தமருது நகரசபை பிரகடனமானது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். அது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய , கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தையும் , சாய்ந்தமருது நகரசபை விடயத்தையும் சேர்த்து தீர்வைக்கண்டு ஒரே வர்த்தமானியில் உள்ளடக்கி வெளியிட்டிருந்தால் இனங்களுக்கிடையில் சர்ச்சை எழுந்திருக்காதென சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோனிடம் அமைச்சர்கள் வினவியபோது இப்படியொரு வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தது தனக்கே தெரியாதெனவும் அது குறித்து தாம் ஆராய்ந்து வருவதாகவும்…

Read More

அதிர்ச்சி செய்தி, இலங்கையில் பாலியல் துஸ்பிரயோக முறைப்பாட்டில் மட்டக்களப்பு முதலிடம்-15 நாட்களில் 44 துஷ்பிரயோகங்கள்

2020ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து 15 நாட்களில் இலங்கையில் 142 பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் மற்றும் 54 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளதாக தரவுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதிலளித்தார். இதன்போதே இந்த துஷ்பிரயோக புள்ளிவிவரங்கள் நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளது இதன்படி, 2020இன் முதல் 15 நாட்களில் 142 துஷ்பிரயோக சம்பவங்கள், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் மற்றும் 54 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடுகளில், 78 துஷ்பிரயோக சம்பவங்கள், 21 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள், 34 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. மேலும், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ்…

Read More

இலங்கைக்கு அருகில் இன்று அதிகாலை நில நடுக்கம்!-சுனாமி முன்னெச்சரிக்கை மையம்!

இலங்கைக்கு அருகில் நில நடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லையெனவும் அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளது. குறித்த நில நடுக்கம் இலங்கைக்கு தென் கிழக்காக இந்து சமுத்திரத்தில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் 5.4 ரிச்டர் அளவில் இன்று 12 ஆம் திகதி புதன்கிமை அதிகாலை 2.34 மணிக்கு பதிவாகியுள்ளது. இதேவேளை, குறுத்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லையெனவும் இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாதி முன்னெச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

சஹரானின் சகாக்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு..

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஸிமுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 61 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கும்படி மட்டக்களப்பு மாவட்ட மேலதிக மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர். நுவரெலியா உட்பட பல பகுதிகளிலும் தீவிரவாதி சஹ்ரான் நடத்திய ஆயுதப் பயிற்சி முகாம்களில் இவர்கள் கலந்துகொண்டனர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள் 61 பேரையும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

Read More

அரவிந்த் கெஜிரிவாலின் இன்னுமோர் முகம்.

டெல்லி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே எழுத நினைத்தேன் ஆனால் எல்லோரும் ஒரு திசையில் போகும்போது நாம் மாற்றமாப் போக வேண்டாம் என அமைதியாகிவிட்டேன் ஆனால் இன்று தேர்தல் முடிந்து முடிவும் வந்துவிட்டதால் எழுதுகிறேன்! டெல்லியில் பாஜகவை ஆம்ஆத்மி வென்றதால் நாட்டிற்கும் மதச்சார்பின்மை மற்றும் இஸ்லாமிய சமூகத்திற்கும் ஏதோ விடிமோட்சம் பிறந்துவிட்டதுபோல பலர் புலங்காகிதம் அடைகின்றனர் ? ஆனால் உண்மையில்….. அரவிந்த் கெஜிரிவாலுக்கும் அமீத்ஷாவிற்கும் ஊசி முனையளவே வித்தியாசம் ! ஆமாம் பயங்கரவாத பாஜக அரசு தங்களின் ஐடியாலஜியின் அடிப்படைத் திட்டங்களான காஷ்மீரின் 370 சிறப்பு அந்தஸ்து நீக்கம் இஸ்லாமியர்களுக்கு எதிரான முத்தலாக் தடைச்சட்டம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்திருத்தம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திருத்தம் ஆகியவற்றிர்க்கு முழு ஆதரவுக் கொடுத்தது! டெல்லி JNU மற்றும் ஜாமிய மாணவப் போராட்டம் மற்றும் அந்த மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு, காவி…

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேகமாக வளர்ச்சியடையும் நன்னீர் மீன்வளர்ப்பு துறை.

மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தடாக மீன்வளர்ப்பு திட்டத்தின் 2ம் கட்ட மீன் அறுவடை நிகழ்வு 11.02.2020 இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி அலுவலகத்தின் (மாகாணம்) மாவட்ட உத்தியோகத்தர் லோ.பிரதீபன், குறித்த பகுதிக்கு பொறுப்பான நீரியல்வள அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.நேர்த்திராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிழக்கு மாகாண மீன்பிடி பிரிவின் மாகாணப் பணிப்பாளர் சி.சுதாகரன் அவர்களின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவட்ட மீன்பிடி அலுவலகம் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் தடாக மீன் வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 2019ம் ஆண்டு முதல் புதுக்குடியிருப்பில் ¼ ஏக்கருக்கு குறைவான நிலப்பரப்பில் தடாக மீன்வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் முதல் கட்டமாக கடந்த 2019 தை மாதம் 2ம் திகதி 4000 திலாப்பியா மீன்குஞ்சுகளை கடுக்காமுனை சமுதாய அடிப்படையிலான…

Read More

ஒரு கல்லில் மூன்று மாங்காய், அதாவுல்லாஹ், ஹரீஸ், கருணா ….

” வியூகங்கள் வகுப்பதில் மொட்டுக்கு நிகர் மொட்டே தான் “ எனலாம். அந்தளவு அதன் வியூகங்கள் கனமானதாக அமையும். கல்முனை – சாய்ந்தமருது விடயத்தில் அதன் வியூகம் அபாரமானது. இது தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடம்பெற்ற பிரதமர் மஹிந்தவுடனான கலந்துரையாடால் உறுதி செய்கிறது. இது வெற்றி பெற்றால் கணிசமான அம்பாறை மாவட்ட சிறுபான்மை மக்களின் வாக்குகளை மொட்டு கைப்பற்றும். இக் கலந்துரையாடலில் அதாவுல்லாஹ், கருணா, பா.உ ஹரீஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதில் பா.உ ஹரீஸ் தனக்கு அழைப்பு விடுக்கப்படாமலேயே அங்கு சென்றதாக கூறுகின்ற போதும், பிரதமருடனான கலந்துரையாடலில் அழைப்பில்லாமல் யாரும் எளிதில் சென்றிட இயலாது என்பதை அறியாதளவு நாம் சிறுபிள்ளைகளுமல்ல. இதுவே இந் நிகழ்வு அரசியலுக்காக பயன்படுத்தப்படுவதை துல்லியமாக்குகின்றது. அழைப்படாமல் சென்றேன் என்பதன் மூலம் பா.உ ஹரீஸ் சமூகத்துக்காக தன் மானத்தை இழக்கும் தியாகியாக…

Read More

மலேசியாவில் entrepreneur of the Year விருதைப் பெற்றுக்கொண்டார் கல்முனையைச் சேர்ந்த கலாநிதி ஏ.ஆர். முகம்மது ஜிப்ரி

அம்பாறை மாவட்டத்தின், கல்முனையை பிறப்பிடமாக கொண்ட கலாநிதி ஏ.ஆர். முகம்மது ஜிப்ரி, மலேசியாவைச் சேர்ந்த Business World International நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான Entrepreneur of the Year விருதைப் பலத்த போட்டிகளுக்கு மத்தியில் பெற்றுக்கொண்டார்.இவர் Jiffrry’z Gem மற்றும் Green Land Property Developers ஆகிய நிறுவனங்களின் தவிசாளரும், கல்முனை ஸாஹிறா கல்லுரியின் பழைய மாணவரும் Colombo Business Association என்ற அமைப்பின் Patron ம் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்விருது மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 08-02-2020 அன்று நடைபெற்றது. செய்தியும் புகைப்படமும் இம்றான் நைனார்

Read More

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் காம லீலைகள் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பகிரங்க படுத்தப்படும்.மாணவர்கள் மிரட்டல்..!!

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது நடாத்தப்பட்ட பாலியல் ரீதியான பகிடிவதை தமிழ் சமூகத்தை தலைகுனிவுக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் மாணவிகள் மீது கொடூரமான முறையில் பாலியல் ரீதியான பகிடிவதையில் ஈடுபட்ட மாணவ காவாலிகளை இனம்கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட உயர் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்ட போது. பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களும் அவர்களுடன் சம்பந்தப்படவர்களாலும் பகிரங்கமாக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது உள்ளக விசாரணை மட்டும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது விரிவுரையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவுகள் மற்றும் பாலியல் தொல்லைகள் தொடர்பான ஆதாரங்களை வெளியிட போவதாக மிரட்டியுள்ளனர். இதனால் சமூகத்தில் நல்லவர்கள் போல் வலம்வரும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர் தங்களின் உண்மை முகம்…

Read More