உண்மையில் எது தமிழரின் புதுவருடப் பிறப்பு? தையா? சித்திரையா?

நித்திரையில் இருக்கும் தமிழா!சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டுஅண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததேஅறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்தரணி ஆண்ட தமிழனுக்குதை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு! ”  என்ற பாரதிதாசன் வரிகளை படித்த போது “அட என்னா இவரு இப்புடி சொல்லிட்டு போயிட்டாரே…” என்று தான் எண்ணத் தோன்றியது. ஆம் தையா? சித்திரையா? எது தமிழரின் வருடப்பிறப்பு? என்ற கேள்விதான் இந்த எண்ணத்திற்கு காரணம்.  எதுவா இருந்தா என்ன அடுத்து சித்திரை வரப்போகுது கொண்டாடிருவம்.. அப்படியே தை வாரப்போ அதையும் கொண்டாடுவம். நமக்கு பலகாரந்தானே முக்கியம்…” இப்படியாக நினைத்துக் கொண்டே வரிகளை மறந்தேன். இருந்தாலும் இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும் ஆர்வம் மட்டும் விலகவில்லை. உண்மையில் எது தமிழரின் புதுவருடப் பிறப்பு? தையா? சித்திரையா?. இந்த விடயத்தை அரசியலாகவும் மாற்றிவிட்டனர். நெடுங்கால பிரச்சார யுத்தமாகவே புத்தாண்டு விடயமும் மாறிப்போய்விட்டது.  அவர்…

Read More

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் கொடியேற்ற விழா எதிர்வரும் 25 ஆம் திகதி

நானிலம் போற்றும் நாஹூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக கல்முனை மாநகர மக்களால் நடாத்தப்படும் 198 வது வருட புனித கொடியேற்று விழா எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவில் நடைபெற உள்ளது. கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் அல்ஹாஜ் S.M.A அஸீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள இவ் விழாவின் கடைகள் ஏலம் எதிர்வரும் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது.       கொடியேற்று தினமான சனிக்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலில் இருந்து புனித கொடியானது…

Read More