41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி,விஷமான மாலு பணிஸ்!

உணவு ஒவ்வாமை காரணமாக, ஹட்டன் கல்வி வலயத்தின் கினிகத்தேன- களுகல சிங்கள வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 41 மாணவர்கள் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை உணவை உட்கொண்ட பின்னர் மாணவர்களுக்கு மயக்கம், வாந்தி ஏற்பட்டதாகவும் இதனால் 11 மாணவிகள் உள்ளடங்களாக 41 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, கினிகத்தேன பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்தப் பாடசாலையில் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் போது, மாணவர்களுக்கு மாலு பணிஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை உட்கொண்ட மாணவர்களே நோய்வாய்ப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நன்றி- மலைநாடு.

Read More

கத்தாரில் வீசா மோசடியில் ஈடுபட்ட 9 பேர் அடங்கிய கும்பல் அதிரடிக் கைது!

கத்தாரில் வீசா விற்பனையில் ஈடுபட்டு வந்த 9 பேர் அடங்கிய கும்பலை கத்தார் உள்துறை அமைச்சின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தேடல் மற்றும் பின்தொடர்தல் திணைக்கள அதிகாரிகள் கத்தார் முழுதும் போலிக் கம்பனிகளின் பெயரில் வீசா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றது. அந்த வரிசையில் வீசாக்களை விற்பனை செய்து வந்த 9 பேர் கொண்ட கும்பல் சிக்கியுள்ளது. இவர்களில் ஆபிரிக்க நாட்டவர்களும், இலங்கையை சேர்ந்த நால்வரும் உள்ளடங்குகின்றனர். வீசா தொடர்பான விளம்பரத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த நிலையில் இந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்களுடன் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் முத்திரைகள், அடையாள அட்டைகள், வங்கி அட்டைகள், மற்றும் பெருந்தொகையான பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி கழுத்தறுத்து கொலை.

யாழ்., பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி  ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் மதியம் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றுள்ளது. கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், குறித்த பெண்ணுக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் இருவரும் அந்த பகுதியில் நீண்டநேரம் உரையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கடலிக் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மாணவியை கொலை செய்து விட்டு, கொலையாளி தப்பி சென்றபோது அப்பகுதியில் கடமையிலிருந்த விமானப்படை புலனாய்வு பிரிவினர் குறித்த கொலையாளியை துரத்தி சென்று கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

Read More

தற்கொலையில் முடிந்தது கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் வாழ்வு.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மருத்துவபீட மாணவனான தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது சடலம் நேற்றுமுன்தினம் வவுனதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு நீர் சதுப்பிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.  பல்கலைக்கழகத்திலிருந்து கடந்த 9 ம் திகதி வெளியேறிய மாணவன் விடுதிக்கு திரும்பவில்லை என்று சகமாணவர்கள் பொலிஸாருக்கு முறையிட்டிருந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது யாவரும் அறிந்தது.  இது தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சம்பவமானது சந்தேகங்களற்ற தற்கொலை என்ற முடிவுக்கு வந்துள்ளதாக மட்டக்களப்புக்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் இலங்கைநெட் ற்கு தெரிவித்தார்.  சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாவது:  குறித்த மாணவனுக்கும் சிரேஷ்ட மாணவி ஒருவருக்குமிடையே தகாத தொடர்பு இருந்து வந்துள்ளது. இத்தொடர்பின் நிமிர்த்தம் யோகராஜன் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுத்திக்கு சென்றுள்ளார். இவர் இவ்வாறு தொடர்ந்து சென்று வந்துள்ளாரா என்பது…

Read More

உண்மையில் எது தமிழரின் புதுவருடப் பிறப்பு? தையா? சித்திரையா?

நித்திரையில் இருக்கும் தமிழா!சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டுஅண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததேஅறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்தரணி ஆண்ட தமிழனுக்குதை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு! ”  என்ற பாரதிதாசன் வரிகளை படித்த போது “அட என்னா இவரு இப்புடி சொல்லிட்டு போயிட்டாரே…” என்று தான் எண்ணத் தோன்றியது. ஆம் தையா? சித்திரையா? எது தமிழரின் வருடப்பிறப்பு? என்ற கேள்விதான் இந்த எண்ணத்திற்கு காரணம்.  எதுவா இருந்தா என்ன அடுத்து சித்திரை வரப்போகுது கொண்டாடிருவம்.. அப்படியே தை வாரப்போ அதையும் கொண்டாடுவம். நமக்கு பலகாரந்தானே முக்கியம்…” இப்படியாக நினைத்துக் கொண்டே வரிகளை மறந்தேன். இருந்தாலும் இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும் ஆர்வம் மட்டும் விலகவில்லை. உண்மையில் எது தமிழரின் புதுவருடப் பிறப்பு? தையா? சித்திரையா?. இந்த விடயத்தை அரசியலாகவும் மாற்றிவிட்டனர். நெடுங்கால பிரச்சார யுத்தமாகவே புத்தாண்டு விடயமும் மாறிப்போய்விட்டது.  அவர்…

Read More

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் கொடியேற்ற விழா எதிர்வரும் 25 ஆம் திகதி

நானிலம் போற்றும் நாஹூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக கல்முனை மாநகர மக்களால் நடாத்தப்படும் 198 வது வருட புனித கொடியேற்று விழா எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவில் நடைபெற உள்ளது. கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் அல்ஹாஜ் S.M.A அஸீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள இவ் விழாவின் கடைகள் ஏலம் எதிர்வரும் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது.       கொடியேற்று தினமான சனிக்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலில் இருந்து புனித கொடியானது…

Read More

சட்ட விரோத கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் அம்பாறை மாவட்ட செயலாளரிடம் ஊடகவியலாளர் கேள்வி.

சட்ட விரோத கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் அம்பாறை மாவட்ட செயலாளரிடம் ஊடகவியலாளர் கேள்வி   அரசாங்கத் தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஊடக செயலமர்வு மற்றும்  மாவட்ட ஊடாகப்பிரிவு அலுவலகத் திறப்பு  விழாவும் அண்மையில் (06) மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.  இந் நிகழ்வில், அரசாங்கத் தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவௌ, அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க, மேலதிக அரசாங்க அதிபர்களான வி.ஜெகதீசன், ஏ.எம்.அப்துல் லத்தீப்  மற்றும் திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டு மாவட்ட ஊடாகப்பிரிவு அலுவலகத்தை திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் அரசாங்க அதிபர் உரையாற்றும் போது,அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மாவட்ட செயலகத்தின் கடமையும் பொறுப்புமாகும். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் தகவல்களை…

Read More

மத்திய கிழக்கில் பதற்ற நிலை – விமானப் பயணப் பாதையில் மாற்றம்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் பதற்ற நிலையை கருத்திற் கொண்டு ஸ்ரீலங்கன் விமான சேவை பயணப் பாதையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு அமைவாக கொழும்பிலிருந்து லண்டன் நகருக்கான விமான பயணப் பாதையிலேயே மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. விமானப் பயணிகளின் பாதுகாப்பு கருதியே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் ஈரான் மற்றும் ஈராக் வான் எல்லைகளை தவிர்த்து பயணங்களை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஈரான் அரசை மனிதாபிமானம் அற்ற நாடாக சித்தரிக்க உக்ரேன் பயணிகள் விமானத்தின் மீது தாக்குதலை 100க்கும் மேற்பட்ட பயணிகள் கொன்று குவித்துள்ளது அமெரிக்கா.

ஈரான் அரசை மனிதாபிமானம் அற்ற நாடாக சித்தரிக்க உக்ரேன் பயணிகள் விமானத்தின் மீது தாக்குதலை 150க்கும் மேற்பட்ட பயணிகள் கொன்று குவித்துள்ளது அமெரிக்கா ராணுவத் தளபதி காசிம் சுலைமான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அமெரிக்கா படுகொலை செய்தது இதன் எதிர்விளைவாக ஈரான் முழுவதும் போர்க்காலம் போன்று உள்ளது, இப்படி ராணுவ தளபதியின் படுகொலைக்கு நிச்சயம் பழிவாங்கும் என அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் அரசு அறிவித்தது…! அமெரிக்காவின் ராணுவத்தை தீவிரவாத அமைப்பாக தடை செய்தது ஈரான் இந்நிலையில் அமெரிக்காவிற்கு மேலும் பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் ராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்களைக் கொன்று குவித்தது ஈரான்… ஈரான் அரசின் எதிர் விளைவால் போர் பதற்றம் அதிகரித்ததால், சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காகவும் ஒரு மனிதாபிமானமற்ற பயங்கரவாத நாடாக ஈரான் அரசை…

Read More