அமெரிக்க தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிட்டு தீக்கிரை.

ஈராக் தலைநகர் பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்தனர். பக்தாத்தில் உள்ள ஈராக்கின் உயர் பாதுகாப்பு வலையத்தில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அமெரிக்க தூதரகமே இத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈராக்கின் பாதுகாப்பு படையினரின் உதவியில்லாமல் யாரும் இந்த உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் நெருங்கமுடியாது என்று கூறப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு லிபிய தலைநகர் பெங்காசியில் அமைந்திருந்த அமெரிக்க தூதரகம் இதுபோன்ற தாக்குதலுக்கு உள்ளாகி அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னால் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுஷைன் மறைத்து 16 வருடங்கள் இவ்வாரம் அனுஸ்டிக்கப்பட்டது. சதாமுக்கு பிந்திய ஈராக் சட்ட ஒழுங்கு சீர்குழைந்து அமெரிக்க ஆசியுடன் ஸ்திரமான ஆட்சி நடத்தமுடியாமல் மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளது. மூண்று மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் அரச எதிர்ப்பு ஆர்பாட்டங்களினால்…

Read More