முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு இந்த அரசு உத்தரவாதம் துருக்கி அதிகாரிகளிடம் பாதுகாப்பு செயலாளர் உறுதி.

இலங்கையில் இனக்கலவரத்துக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.இலங்கையில் பணிமுடிந்து செல்லும் துருக்கியின் தூதர், பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்னவை இன்று -30- சந்தித்தபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.இந்த சந்திப்பின்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளன.இதன்போது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் முஸ்லிம்கள் ஈடுபடவில்லை என்றும் அவர்கள் அரசாங்கத்துக்கு எப்போதும் ஆதரவு வெளியிட்டு வருவதாகவும் துருக்கியின் தூதுவர் தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த கமல் குணரட்ன, திகன, கண்டியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் போன்று இந்த அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் சம்பவம் எதுவும் இடம்பெற அனுமதிக்கப்படமாட்டாது என்று குறிப்பிட்டார்.

Read More

பாலைவனத்தில் பசுமை நகரம் – சீன அரசின் புதிய முயற்சி…!

சீனாவில் பாலைவனத்தில் ஒரு கோடியே 30 லட்சம் மரங்களை வளர்த்து ஒரு பசுமை நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. மனித நடமாட்டமே அரிதிலும் அரிதான டக்லமகான் (TAKLAMAKAN) என்னும் மிகப்பெரிய பாலைவனத்தை ஒட்டியுள்ள நகர்தான் அக்சு.. இந்த நகரில் ஆண்டுக்கு சுமார் 100 நாட்கள் கடுமையான புழுதி புயல் வீசி அங்குள்ள மக்களை கடுமையான சிரமத்திற்குள்ளாக்கும். இதுபோன்ற சிக்கலில் இருந்து மீள ஒரு வனத்தையே உருவாக்குவதற்கான மிகப்பெரிய திட்டத்தை தீட்டியது சீனா. இதற்காக அங்குள்ள மண்ணை பரிசோதிக்கும் போது, மரம் வளர்வதற்காக சாத்திய கூறே இல்லாமல் இருந்தது. இருப்பினும் நிச்சயம் மாற்றம் வேண்டும் என விரும்பிய சீன அரசு, கேகாயா பசுமை திட்டம் என்ற ஒன்றை கொண்டு வந்தது. இதன்மூலம் அந்த வறண்ட மண்ணில் மரம் வளர்ப்பதை சாத்தியப்படுத்த முயற்சித்தது சீன அரசு. ஆனால் இதனை வகுக்கும் முன்னரே ஒரு…

Read More