கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ் பதவி நீக்கப்பட்டார்!

கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் காத்தமுத்து கனேஷ் மற்றும் மாநகர சபை உறுப்பினர் சுமித்ரா ஜெகதீசன் ஆகிய தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் இருவரும் மாநகர சபை உறுப்புரிமையை இழந்துள்ளனர். இதற்க்கான வர்த்தமாணி அறிவித்தலை அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி திலின விக்கிரமரத்ன வெளியிட்டுள்ளார், இவர்கள் இருவரும் கட்சி உறுப்புரிமையை இழந்திருப்பதனால் கல்முனை மாநகர சபையின் உறுபினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இவர்களது பதவி நீக்கம் பற்றி கல்முனை மாநகர மேயர் மற்றும் ஆணையாளருக்கு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மேற்படி வர்த்தமானி அறிவித்தல் இணைக்கப்பட்ட கடிதம் மூலம் அறிவித்துள்ளார். கடந்த 2018 யில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் இவ் இருவரும் போட்டியிட்டு தோல்வியுற்ற போதும் அக் கட்சிக்கு கிடைத்த நியமன பட்டியல் மூலம் மாநகர…

Read More

கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட நூலகத்திற்கு மாகாண மட்ட விருது, முதல்வர் பாராட்டு !

தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையினால் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான பொது நூலகங்களின் பாதுகாப்பு பேணல் தொடர்பான ஆய்வுப் போட்டியில் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பொது நூலகம் கிழக்கு மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளது. இதற்காக கிடைக்கப்பெற்ற சான்றிதழ் மற்றும் விருது என்பவற்றை சாய்ந்தமருது நூலகர் ஏ.சி.அன்வர் சதாத், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களிடம் கையளித்தார். கல்முனை மாநகர சபையின் முதல்வர் செயலக கேப்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி ஆணையாளர் எம்.ஐ.பிர்னாஸும் பங்கேற்றிருந்தார். இவ்விருதானது கல்முனை மாநகர சபைக்கும் சாய்ந்தமருது மண்ணுக்கும் பெருமையைத் தேடித்தந்திருப்பதாக இதன்போது மகிழ்ச்சி தெரிவித்த மாநகர முதல்வர் றகீப் அவர்கள், இதற்காக இந்நூலகத்தில் சிறப்பாக பணியாற்றி வருகின்ற நூலகர், உதவி நூலகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாநகர சபையின் சார்பில் பாராட்டைத்…

Read More

சுனாமி பேரலை – உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்திக்காக மத வழிபாடுகள் இடம்பெற்றன.

நாட்டின் பல பிரதேசங்களில் சுனாமி கடற் பேரலையினால் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்திக்காக மத நிகழ்வுக் இடம்பெற்றன. கடந்த 2004 ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்த உறவினர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு உறவுகளால் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. பிரதான சமய நிகழ்வு ஹிக்கடுவவில் உள்ள தெல்வத்த சுனாமி நினைவு தூபிக்கு அருகில் நடைபெற்றது. இந் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அரச அதிகாரிகள் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.  இதேவேளை காலை 9.25 இல் இருந்து இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சுனாமி அனர்தத்தில் சிக்குண்ட ரெயிலில் பயணித்தவர்களை நினைவு கூரும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட குறித்த ரெயில் இன்று காலை தெல்வத்த பிரதேசத்தை நோக்கி பயணித்தது. யாழ்ப்பாணத்தில் வடமராட்சி கிழக்கு, உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் முற்பகல் 9.35…

Read More

சுனாமியினால் உயிரிழந்தவர்களை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

15 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி பேரலை காரணமாக உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று (26) நாடு பூராகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தமது நெருங்கிய உறவுகளை இழந்து இன்றும் துயரத்தில் ஆழ்ந்துள்ள அனைத்து இலங்கையர்களுடனும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் இணைந்துகொண்டுள்ளார். ‘இலங்கை மக்கள் இதுவரை முகங்கொடுக்க நேர்ந்த மிகக் கொடூரமான இயற்கை அனர்த்தம் சுனாமி பேரலையாகும். அந்த பயங்கர அனுபவத்தின் துயர் மிகுந்த ஞாபகங்கள் ஒருபோதும் எமது மனங்களை விட்டு அகலாது.’ அதனை ஒரு கடந்தகால அனுபவமாகக் கருதி எதிர்காலத்தில் அத்தகைய அனர்த்தங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுப்பதற்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். இதற்காக புதிய தொழிநுட்ப முறைகளுடன் இணைந்துகொள்ள வேண்டுமென்பதோடுஇ தொடர்ச்சியாக அவற்றை மீளாய்வுக்குட்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார். சுனாமி பேரலையினால் எமது நாடு…

Read More

வெட்டுப்புள்ளி – புலமைப்பரிசில் மாணவர்களுக்கு மேன்முறையீடு செய்ய கோரிக்கை.

வெட்டுப்புள்ளி அடிப்படையில் இதுவரையில் பாடசாலைக்கான அனுமதி கிடைக்கப்பெறாத அல்லது கிடைத்துள்ள பாடசாலை நியாயமான காரணங்களின் அடிப்படையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களிடம் இருந்து மேன்முறையீடு செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டில் தரம் 5 பாடசாலைகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகளைப் போன்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய ஒவ்வொரு மாணவருக்கும் உரித்தாகவுள்ள பாடசாலை ஆவணம் கல்வி அமைச்சினால் தற்பொழுது வெளியிடப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் இணையத்தளமான www.moe.gov.lk இணையத்தளத்தின் ஊடாக இந்த விபரங்கைளை அறிந்து கொள்ளமுடியும். இந்த வெட்டுப்புள்ளி அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் தகுதி பெற்றிருந்த போதிலும் அதற்கு அமைவாக கிடைக்க வேண்டிய…

Read More

கூடுதலான விலைக்கு அரசியை விற்பனை செய்த 10 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை.

மாத்தறை மாவட்டத்தில் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 5 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 10 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளனர். 2 ரக அரிசிகள் ஆக கூடிய சில்லறை விலை 98 ரூபாவாக நிர்ணயித்து நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை வர்த்தகமானியில் வெளியிட்டிருந்தது. இந்த வர்த்தமானி அறிவிப்பை கவனத்தில் கொள்ளாது அரிசியை கூடுதலான விலைக்கு விற்பனை செய்த கிரிந்த என்ற இடத்தை சேர்ந்த 2 வர்த்தகர்களுக்கும், ஹக்மனவை சேர்ந்த ஒருவருக்கும், காலாவதியான பொருட்களை விற்பனை செய்த மற்றும் விலைப்பட்டியலை காட்சி படுத்தாது அரிசியை விற்பனை செய்த 2 வர்த்தகர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நன்றி தகவல் ஊடக மையம்.

Read More

“புத்தரின் மகள்கள்’’ இலங்கை பெண் பௌத்த துறவிகளுக்கு இழைக்கப்படும் அநிதிகளும் அவர்களின் உரிமைப் போராட்டமும்.

இளம் பெண் துறவி கண்ணீருடன் தன் கதையை விவரிக்கிறார். ”தேவையான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருந்தன. ஆனால் பௌத்த மத விவகாரங்களுக்கான துறை எனக்கு அடையாள அட்டை வழங்க மறுத்துவிட்டது,” என்று அமுனுவட்டே சமந்தபத்ரிகா தேரி விளக்கினார். அவர் கண்ணீர் விடுவதில் வியப்பு ஏதும் இல்லை. இலங்கையில் அடையாள அட்டை என்பது வாழ்க்கைக்கு முக்கியமானது. வாக்களிப்பது முதல் வங்கிக் கணக்கு தொடங்குவது அல்லது பாஸ்போர்ட் பெறுவது வரையில், வேலைக்கு விண்ணப்பித்தல் அல்லது தேர்வுகளில் பங்கேற்பது வரை அடையாள அட்டை தேவைப்படுகிறது. ஆனால் சமந்தபத்ரிகா அடையாள அட்டை பெற தகுதியற்றவர். இவரைப் போன்ற பெண்களுக்கு இந்த உரிமை 2004ஆம் ஆண்டில் பறிக்கப்பட்டது. அரசில் செல்வாக்கு மிகுந்துள்ள நாட்டின் மதகுருக்கள், ”பிக்குணிகள்” என்று பெண் துறவிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும், இனியும் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கக்…

Read More