பர்வேஸ் முஷாரஃப் மரண தண்டனை, நீதித்துறையுடன் மோதும் பாகிஸ்தான் ராணுவம்!

பாகிஸ்தான் முன்னாள் அதிபரும் ராணுவத் தளபதியுமான ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபுக்கு கடந்த வாரம் தேச துரோக வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டது அந்த நாட்டின் ராணுவம் மற்றும் நீதித்துறை இடையே மோதலை உருவாக்கியுள்ளது.  அரசின் நிர்வாகத்தில் ராணுவத்தின் தலையீடு அதிகம் இருப்பதாக ராணுவம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்த அந்த நாட்டில் நீண்ட காலமாக குற்றச்சாட்டு நிலவுகிறது. 2007ல் அரசமைப்பை மீறி அவசர நிலையை பிரகடனப்படுத்தி தேச துரோகம் செய்ததாக அவர் மேல் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பாகிஸ்தான் அரசியலமைப்பின் பிரிவு 6ன்படி நாட்டின் அரசியலமைப்பு அமலாவதை தடுக்கும் வகையில் செயல்படவோ, தற்காலிகமாக நீக்கவோ அல்லது நிறுத்திவைக்கவோ முற்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கலாம். இந்த சட்டத்தின்படிதான் முஷாரஃப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 17 டிசம்பர் அன்று வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு அந்த…

Read More

இந்தியாவில் ‘தீண்டாமை’ விவகாரம்: 3000 தலித்துகள் இஸ்லாம் மதத்திற்கு மாற திட்டம்

தலித் மக்கள் மீது காட்டப்படும் பாரபட்சம் காரணமாக 3000 தலித்துகள் இஸ்லாம் மதத்துக்கு மாறத் திட்டமிட்டுள்ளதாக தலித் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. எனினும், அவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. தமிழ் புலிகள் கட்சியின் இந்த முயற்சியை இந்து அமைப்புகள் விமர்சித்துள்ளன. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், நடூர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் தனியார் சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 17 தலித் மக்கள் உயிரிழந்தனர். உயிரிழப்பிற்கு காரணமான ஜவுளிக்கடை அதிபர் சிவசுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீஸார், தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனை கைது செய்தனர். இந்த வழக்கில் நாகை திருவள்ளுவன் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தமிழ் புலிகள் கட்சியின்…

Read More

இந்திய குடியுரிமை திருத்த சட்டப் போராட்டம்: இந்தியாவை விட்டு வெளியேறும் போது ஜெர்மன் மாணவர் கூறியது என்ன?

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை ஐ.ஐ.டி.யில் போராடிய ஜெர்மன் மாணவர் ஜேக்கப் லின் டென்தல், விசா விதிகளை மீறியதாக கூறி ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டார். சென்னை ஐ.ஐ.டி யில், இயற்பியல் பயின்று வந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஜேக்கப் என்ற மாணவர், இந்தியாவின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் கலந்துகொண்டார். போராட்டத்தின்போது ”யூத இன அழிப்பு ” குறித்தும் இந்தியக் காவல் அதிகாரிகளை விமர்சிக்கும் வகையிலும் பதாகைகளை அவர் ஏந்தியிருந்தார். இன்று (புதன்கிழமை) டெல்லி விமானநிலையத்தில் பேசிய அவர், “திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கு கொள்ளலாம் என முடிவெடுத்தது திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவு அல்ல. என் நண்பர்கள் இந்த சட்டம் மக்கள் விரோதமானது என்றார்கள். மக்களின் போராட்டம் என்னை அசைத்துப் பார்த்தது. போராட்டத்தில் பங்கெடுத்தது திடீரென எடுக்கப்பட்ட முடிவு. மனிதநேயத்துக்கு எதிரான…

Read More

கல்விப் பொதுத் தராதர உயர்த்தர பரீட்சை பெறுபேறு எதிர்வரும் சனிக்கிழமை.

2019 ஆம்ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடக்கூடியதாக இருக்குமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். கலவிப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் முதல் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது. நாடு பூராகவுமுள்ள 82 நிலையங்களில் இது இடம்பெறவுள்ளது. மதிப்பீட்டு பணிகளில் 28 ஆயிரம் பேர் ஈடுபடவுள்ளனர். விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகி 26 ஆம திகதி நிறைவடையவுள்ளது. அதில் எட்டாயிரம் பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

Read More

வாழ்க்கைச் செலவு அமைச்சரவை உப குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது.

வாழ்க்கைச் செலவு தொடர்பாக ஆராயும் அமைச்சரவை உப குழு முதன்முறையாக மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது அடுத்த போகம் முதல் விஞ்ஞானபூர்வமான முறைமைக்கு ஏற்ப அறுவடைகள் கொள்வனவு… நாடளாவிய ரீதியில் களஞ்சிய வசதிகளை விரிவுபடுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு… எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பற்றாக்குறையின்றியும் நிவாரண விலையிலும் மக்களுக்கு உணவுப் பொருட்களை பெற்றுக்கொடுப்பது பற்றி இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. மேலும் அடுத்த போகம் முதல் அறுவடைகளை கொள்வனவு செய்யும்போது விஞ்ஞானபூர்வமான முறைமையொன்றினை பின்பற்றுமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இதன் மூலம் நெல் கொள்வனவின்போது ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கக்கூடியதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக் காட்டினார். நாடளாவிய ரீதியிலுள்ள களஞ்சிய வசதிகளை விரிவபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட…

Read More