யாழ்ப்பாணம் – அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வீட்டின் வளாகத்தில் ஆயுதக் கிடங்கு உள்ளதாக தெரிவித்து அகழ்வு பணிகள் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று குறிப்பிட்டு தெய்வீகன், அப்பன் மற்றும் கோபி ஆகிய போராளிகள் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதி வவுனியாவில் படுகொலை செய்யப்பட்டனர். அவர் மூவரும் அரியாலை தபால் கட்டைச் சந்திக்கு அண்மையாக உள்ள வீட்டில் தங்கியிருந்து பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று குறிப்பிட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தமது கட்டுப்பாட்டுக்கள் வீட்டை வைத்திருந்தனர். தற்போதும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரே அந்த வீட்டை தமது கட்டுப்பாட்டுக்கள் வைத்துள்ளனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வீட்டில் பெரியளவிலான ஆயுதக் கிடங்கு உள்ளதாக இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அதுதொடர்பில் நீதிமன்றின் அனுமதியைப் பெற்று அகழ்வுப் பணிகளை…
Read MoreMonth: November 2019
விரைவில் அரசியலில் இருந்து ரனில் ஓய்வு.!
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து விடைபெறுவதற்கு தீர்மானித்துள்ளார். லங்கா நியூஸ் வெப் செய்தித்தளத்திற்கு வழங்கிய விசேட அறிக்கையின் மூலம் இதனை ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இதற்கமைய இந்த வருடம் நிறைவடையும் போது தனது 42 வருடகால அரசியல் வாழ்க்கைக்கு விடைகொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு தரப்பினரால் தற்போது உருவாக்கப்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்கள் சஜித் பிரேமதாசவுக்கு எதிர்க்கட்சித் தலைமை பதவி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால பொறுப்பு சஜித் பிரேமதாசவுக்கு வழங்கவேண்டும் என ஜனாதிபதி தேர்தலுக்கு பின் அவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள். அவ்வாறு நடைபெறாவிடின் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியை உருவாக்குவதற்கு சிலர் எத்தனித்து வருகிறார்கள். இந்தப் பின்னணியில்தான்…
Read More