இரண்டு துரோகங்கள் தந்த வலிகள்.

  1990 ஒக்டோபர் 30இன் விடியலை யாழ் முஸ்லிம்கள் சூரிய உதயமென்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால், அச்சிவப்பின் பின்னணியில் குருதிவாடை வீசி அம் மக்களின் வறுமை, விரக்தி, வாழ்வழிப்பு, வெளியேற்றம் போன்ற பல நினைத்தும் பார்க்க முடியாத அராஜகங்கள் இடம்பெற்று அழிக்கமுடியாதா கரும்புள்ளியாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. விடுதலை வேண்டி போராடும் ஒரு இனம் மற்றுமொரு இனத்தினை விடுதலை போராட்டத்தின் பெயரால் திட்டமிட்டமுறையில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலிருந்து வன்முறையால் அல்லது பயங்கரவாதத்தால் அழித்தொழித்தல் அல்லது வெளியேற்றுதல் ‘இனச்சுத்திகரிப்பு’ எனப் பொருள்பட்டால், 1990 ஒக்டோபர் 30இல் முஸ்லிம்கள் 2 மணித்தியாலயத்தில் தம் பிறப்பிட பூமியிலிருந்து தங்கள் உடமைகள பறிகொடுத்து விரட்டப்பட்டதும் இனச்சுத்திகரிப்பே என்பதில் யாருக்கும் ஐயமில்லை. 1990 ஒக்டோபர் 30 காலை 6 மணி…. வீதியெங்கும் விடுதலைப் புலிகளின் ஒலிபெருக்கிகள் அலறின. அவர்களின் அறிவிப்பிற்கேற்ப முஸ்லிம் ஆண்கள் யாழ். ஜின்னா மைதானத்திற்குச்…

Read More