கல்முனை அரசியல் அதிகாரத்தின் இயலாமையை துகிலுரிக்கிறார் சட்டமுதுமாணி வை எல் எஸ் ஹமீட்.

சட்ட முதுமாணி வை எல் எஸ் ஹமீட்  கல்முனை அரசியல் அதிகாரத்தின் இயலாமையை துகிலுரிக்கிறார். கல்முனை உப ( தமிழ்) பி செயலகம், தமிழருக்கு அதற்கான ஒரு தேவை இருக்கின்றது; என்பதற்காக அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டதல்ல.   வட கிழக்கில் 80 களின் ஆரம்பத்தில் ஆயுதப்போராட்டம் உக்கிரமடையத் தொடங்கியபோது, சிங்கள அரசின்கீழ் ஆளப்படும் இனமாக தாம் இருக்கவிரும்பாத அதேவேளை மொத்த வட கிழக்கிலும் தாமே ஆளும் இனமாக இருக்கவேண்டும்; இன்னொரு சிறுபான்மையான முஸ்லிம்கள் ஆளப்படும் இனமாகவே இருக்கவேண்டும்; என்பதில் தமிழ் ஆயுதப்போராட்டம் தெளிவுடன் இருந்தது.   அன்று தந்தை செல்வா, கிழக்கில் முஸ்லிம்களுக்கு ஒரு தனி அலகு வழங்கப்படவேண்டுமென்பதை கொள்கைப் பிரகடனமாக செய்தார். அவ்வாறான, முஸ்லிம்களுக்கான ஒரு தனி அலகிற்கு அடையாளப்படுத்தப்படக்கூடிய ஒரே பிரதேசமாக தென்கிழக்கே இருந்தது.   வட கிழக்குப் பிரிப்பு சாத்தியமே இல்லை; என்ற ஒரு…

Read More