சாய்ந்தமருது மக்களுக்கு கல்முனை முதல்வர் விடுக்கும் அன்பான வேண்டுகோள்!

சாய்ந்தமருது பிரதேசத்தில் கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை கடந்த சில தினங்களாக ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறித்து தெளிவுபடுத்த விரும்புகின்றேன். கடந்த வியாழக்கிழமை சோலை வரி அறவிடுவதற்காக சாய்ந்தமருது பிரதேசத்திற்கு வருகைதந்த கல்முனை மாநகர சபையின் வரி அறவீட்டு உத்தியோகத்தர்களை, மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேட்சைக் குழு உறுப்பினரான றபீக் அவர்கள், சாய்ந்தமருது மக்களிடம் சோலை வரி அறவிட வர வேண்டாம் என அச்சுறுத்தி, திருப்பியனுப்பிய சம்பவமே அப்பிரதேசத்தில் கல்முனை மாநகர சபையினால் குப்பை சேகரிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. சாய்ந்தமருது பிரதேசத்தில் கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டமை இது முதற் தடவையல்ல. இதற்கு முன்னரும் பல தடவைகள் சோலை வரி அறவிடுவதற்காகவும் வியாபார அனுமதிப்பத்திர விநியோகத்திற்காகவும் சென்ற மாநகர சபை உத்தியோகத்தர்கள் தடுக்க்ப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் தாக்கப்பட்டும் அனுப்பப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.…

Read More