முன்நாள் பாதுகாப்பு செயலாளர் ஹெமஶ்ரீ பெர்ணாண்டோ கைது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமஶ்ரீ பெர்ணாண்டோ குற்றப்புலனாய்வு பிரிவால் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் சம்பம் தொடர்பில் முன்னரே அறிந்திருந்தும் அது தொடர்பில் உரியவர்களுக்கு அறியதராததன் காரணமாக அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியிருந்தது. இந்நிலையிலேயே அவர் இன்று கைதாகவிருந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் போதே சற்று முன்னர் கைதாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Read More

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் நேற்று புகைப்படம் எடுத்து கைதானவர் பிணையில் விடுதலை.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் முகப்பைப் படம் பிடித்தார் என்று சந்தேகத்தின் பெயரில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் முகம்மது ராபிதீன் (வயது 40) நேற்று கைது செய்யப்பட்டு இன்று கல்முனை நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். ஒரு வருடங்களுக்கு முன்னர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் தான் ஒரு நிர்மாணப் பணியொன்றைச் செய்ததாகவும் அப்பணியில் தவறிருப்பதாக மூன்றாம் தரப்பொன்றினால் செய்யப்பட்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்து அதனைப் பரீட்சிப்பதற்காக தன்னால் பூர்த்தி செய்யப்பட்ட பணியினை புகைப்படம் எடுத்ததாகவும் அதனை அவதானித்த சிலர் சந்தேகம் கொண்டு தன்னை தாக்க வந்ததாகவும் ராபிதீன் குறிப்பிட்டார். இவருக்காக இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் குரல்கள் இயக்க சட்டத்தரணிகளான இயாஸ்தீன் இத்ரீஸ்,சுஹால்ஸ் பிர்தௌஸ், இன்னும் சில சட்டத்தரணிகளும் மன்றில் ஆஜரானார்கள். இவர்கள் மன்றில் தோன்றி குறித்த சந்தேக நபர் தொடர்பான உண்மையான நிலமையை மன்றுக்கு எடுத்து இயம்பியதுடன்…

Read More