கல்முனையின் எல்லையை விட்டுக்கொடுக்க முடியாது.

  கல்முனையில் முஸ்லிம்களின் பிரச்சினை என்ன? முஸ்லிம்கள் உள்ளூராட்சி சபை கேட்கவில்லை; ஏனெனில் அவர்களுக்கு மாநகரசபை இருக்கின்றது. 1946ம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு உள்ளூராட்சி சபை இருக்கிறது. கல்முனையில் முஸ்லிம்கள் பிரதேச செயலகம் கேட்கவில்லை. ஏனெனில் 1946ம் ஆண்டு DRO முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்றுவரை அவர்களுக்கு பொதுநிர்வாகக் கட்டமைப்பு இருந்துவருகிறது. அவர்களுக்கென்று 90% முஸ்லிம்களைக்கொண்ட கிழக்குமாகாணத்திலேயே மிகப்பெரும் வர்த்தக கேந்திர நிலையம் இருக்கின்றது. எனவே, கல்முனையில் புதிதாக முஸ்லிம்கள் எதையும் கேட்கவில்லை. இருப்பதை நவீனமயப்படுத்தவேண்டிய தேவை மட்டுமே இருக்கின்றது. இலங்கையிலேயே முஸ்லிம்களுக்கென்று இருக்கின்ற ஒரேயொரு பெருநகரம் இதுவாகும். இதனால்தான் இது முஸ்லிம்களின் தலைநகரமென்றும் தென்கிழக்கின் முகவெற்றிலை என்றும் அழைக்கப்படுகிறது. பிரச்சினை என்ன? ————————- கல்முனையில் எதுவுமே கேளாத முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை? ஏன் இவ்வளவு பதட்டம்? ஏனெனில் கல்முனையின் ஒரு பிரதான பாகத்தைத் தமிழர்கள் கேட்கிறார்கள். அதுதான்…

Read More

காலனித்துவ நீக்கம்..

  ‘காலனித்துவ நீக்கம்’ என்பது நம்மில் பலருக்குப் பரிச்சயமில்லாத, ஆனால் சுவாரஸ்யமானதொரு கருப்பொருளாகும். கொஞ்சம் பொறுமையாக இறுதிவரை வாசித்து, தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன். ******************************************* முஸ்லிம் மனதைக் காலனித்துவ நீக்கம் செய்தல் – யூசுஃப் பிராக்ளர் இன்று ‘மூன்றாம் உலகு’ என்றழைக்கப்படும் நிலப்பகுதிகளை ஐரோப்பிய-அமெரிக்க சக்திகள் பலாத்காரமாக பௌதிக ரீதியில் பிடித்துவைத்து, அவற்றின் வளங்களை நம்பவொண்ணா அளவில் சுரண்டிவந்த ஒரு வரலாற்றுக் காலகட்டமே ‘காலனித்துவம்’ என்று பெரும்பாலும் தற்போது புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது. மேற்கத்திய சக்திகளின் இந்த அமைப்பு ரீதியான கொள்ளை ஸ்பெயினிலிருந்து துவங்கியது. அந்தலூஸியாவில் இருந்த இஸ்லாமிய ஃகிலாபத்தை அழித்து, அதனிடமிருந்து களவாடிய தங்கத்தையே அமெரிக்க கண்டங்கள் நெடுகிலுமான தனது சாகசங்களில் ஸ்பெயின் முதலீடு செய்தது. (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: ‘இஸ்லாமிய கிலாபத்’ என்ற சொல்லாடலைக் காட்டிலும் ‘முஸ்லிம் மன்னராட்சி’ என்பதே இங்கு பொருந்துகிறது).…

Read More

கல்முனை அரசியல் அதிகாரத்தின் இயலாமையை துகிலுரிக்கிறார் சட்டமுதுமாணி வை எல் எஸ் ஹமீட்.

சட்ட முதுமாணி வை எல் எஸ் ஹமீட்  கல்முனை அரசியல் அதிகாரத்தின் இயலாமையை துகிலுரிக்கிறார். கல்முனை உப ( தமிழ்) பி செயலகம், தமிழருக்கு அதற்கான ஒரு தேவை இருக்கின்றது; என்பதற்காக அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டதல்ல.   வட கிழக்கில் 80 களின் ஆரம்பத்தில் ஆயுதப்போராட்டம் உக்கிரமடையத் தொடங்கியபோது, சிங்கள அரசின்கீழ் ஆளப்படும் இனமாக தாம் இருக்கவிரும்பாத அதேவேளை மொத்த வட கிழக்கிலும் தாமே ஆளும் இனமாக இருக்கவேண்டும்; இன்னொரு சிறுபான்மையான முஸ்லிம்கள் ஆளப்படும் இனமாகவே இருக்கவேண்டும்; என்பதில் தமிழ் ஆயுதப்போராட்டம் தெளிவுடன் இருந்தது.   அன்று தந்தை செல்வா, கிழக்கில் முஸ்லிம்களுக்கு ஒரு தனி அலகு வழங்கப்படவேண்டுமென்பதை கொள்கைப் பிரகடனமாக செய்தார். அவ்வாறான, முஸ்லிம்களுக்கான ஒரு தனி அலகிற்கு அடையாளப்படுத்தப்படக்கூடிய ஒரே பிரதேசமாக தென்கிழக்கே இருந்தது.   வட கிழக்குப் பிரிப்பு சாத்தியமே இல்லை; என்ற ஒரு…

Read More

தோனி இந்திய அணியில் இடம் பிடித்தாலும், இனி ரிஷப் பந்த் தான்…

மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் தோனி அணியில் இடம்பெறமாட்டார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியோடு வெளிவந்தபின் வீரர்கள் குறித்தும், இந்திய அணியின் வெற்றி, தோல்விகள் குறித்தும் நடைபெறும் விவாதங்களில் பிரதானமாக இருப்பது தோனியின் ஓய்வு குறித்து எழுப்பப்படும் கேள்விகள் தான். தோனியோ, அணி நிர்வாகமோ அதிகாரபூர்வமாக அறிவிக்காவிட்டாலும் கிரிக்கெட் பேச்சுகள் அனைத்தும் இதை ஒட்டியே அமைந்துள்ளன. இந்திய அணி ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தோனிக்குப் பதிலாக ரிஷப் பந்துக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அணி…

Read More

முகத்தில் என்றுமே சுருக்கம் வராமல் இருக்க இதை பண்ணுங்க போதும்…!

1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி 20 நிமிடத்திற்கு பின் கழுவவும். இந்த குறிப்பை தினமும் 1 முறையாவது செய்து வந்தால் முக சுருக்கங்கள் மறைந்து, இளமை தோற்றம் நீடிக்கும். 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யை கலந்து கொண்டு முகத்தில் தடவி இதமாக மசாஜ் கொடுக்கவும். இதனை 20 நிமிடம் கழித்து நீக்கி விடலாம். 1 நாளைக்கு 3 முறை இப்படி செய்து வந்தால் நல்ல பலனை அடைய முடியும் உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, என்றுமே இளமையாக இருக்க இந்த குறிப்பு உதவும். 1 ஸ்பூன் பன்னீரை எடுத்து கொண்டு அதனை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடம்…

Read More

மாம்பழத்தை இந்த முறையில் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது! அது எப்படினு பாருங்கள்…??

பல்ஜீரியாவில் தனது ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்துள்ள ராச்சல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். பொதுவாக சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிட அனுமதிக்கபடுவதில்லை காரணம் அதன் இனிப்பு அவர்கள் சர்க்கரை அளவினை அதிகரிக்கும் என்பது தான். ஆனால் ராச்சல் ஆய்வுக்கட்டுரையின் மூலமாக இனி சர்க்கரை நோயாளிகள் கூட மாம்பழம் பயமில்லாமல் சாப்பிடலாம் என கூறுகிறார். ஏனெனில், மாம்பழத்தில் அதிகமாகபுள்ள  மான்சி ஸ்பெரின் சர்க்கரை அளவை குறைக்கும் என அவரது ஆய்வு கட்டுரை குறிப்பிடுகிறது. மேலும் மாம்பழம் இணை மருந்தாக எடுத்துக்கொண்டால் சீரான மற்றும் நேர்த்தியான பலன் கிடைப்பதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர். குறிப்பாக சர்க்கரை நோய்க்காக சிகிச்சை பெறுபவர்களுக்கு காலப்போக்கில் வரும் பக்க விளைவுகள் கூட இந்த முறையில் எடுத்துக் கொள்ளும் போது பயனளிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மேலும் இதற்கான ஆய்வு கட்டுரைக்காக பலரும் பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர். வைரல்.

Read More

சாய்ந்தமருது மக்களுக்கு கல்முனை முதல்வர் விடுக்கும் அன்பான வேண்டுகோள்!

சாய்ந்தமருது பிரதேசத்தில் கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை கடந்த சில தினங்களாக ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறித்து தெளிவுபடுத்த விரும்புகின்றேன். கடந்த வியாழக்கிழமை சோலை வரி அறவிடுவதற்காக சாய்ந்தமருது பிரதேசத்திற்கு வருகைதந்த கல்முனை மாநகர சபையின் வரி அறவீட்டு உத்தியோகத்தர்களை, மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேட்சைக் குழு உறுப்பினரான றபீக் அவர்கள், சாய்ந்தமருது மக்களிடம் சோலை வரி அறவிட வர வேண்டாம் என அச்சுறுத்தி, திருப்பியனுப்பிய சம்பவமே அப்பிரதேசத்தில் கல்முனை மாநகர சபையினால் குப்பை சேகரிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. சாய்ந்தமருது பிரதேசத்தில் கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டமை இது முதற் தடவையல்ல. இதற்கு முன்னரும் பல தடவைகள் சோலை வரி அறவிடுவதற்காகவும் வியாபார அனுமதிப்பத்திர விநியோகத்திற்காகவும் சென்ற மாநகர சபை உத்தியோகத்தர்கள் தடுக்க்ப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் தாக்கப்பட்டும் அனுப்பப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.…

Read More

முன்நாள் பாதுகாப்பு செயலாளர் ஹெமஶ்ரீ பெர்ணாண்டோ கைது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமஶ்ரீ பெர்ணாண்டோ குற்றப்புலனாய்வு பிரிவால் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் சம்பம் தொடர்பில் முன்னரே அறிந்திருந்தும் அது தொடர்பில் உரியவர்களுக்கு அறியதராததன் காரணமாக அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியிருந்தது. இந்நிலையிலேயே அவர் இன்று கைதாகவிருந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் போதே சற்று முன்னர் கைதாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Read More

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் நேற்று புகைப்படம் எடுத்து கைதானவர் பிணையில் விடுதலை.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் முகப்பைப் படம் பிடித்தார் என்று சந்தேகத்தின் பெயரில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் முகம்மது ராபிதீன் (வயது 40) நேற்று கைது செய்யப்பட்டு இன்று கல்முனை நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். ஒரு வருடங்களுக்கு முன்னர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் தான் ஒரு நிர்மாணப் பணியொன்றைச் செய்ததாகவும் அப்பணியில் தவறிருப்பதாக மூன்றாம் தரப்பொன்றினால் செய்யப்பட்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்து அதனைப் பரீட்சிப்பதற்காக தன்னால் பூர்த்தி செய்யப்பட்ட பணியினை புகைப்படம் எடுத்ததாகவும் அதனை அவதானித்த சிலர் சந்தேகம் கொண்டு தன்னை தாக்க வந்ததாகவும் ராபிதீன் குறிப்பிட்டார். இவருக்காக இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் குரல்கள் இயக்க சட்டத்தரணிகளான இயாஸ்தீன் இத்ரீஸ்,சுஹால்ஸ் பிர்தௌஸ், இன்னும் சில சட்டத்தரணிகளும் மன்றில் ஆஜரானார்கள். இவர்கள் மன்றில் தோன்றி குறித்த சந்தேக நபர் தொடர்பான உண்மையான நிலமையை மன்றுக்கு எடுத்து இயம்பியதுடன்…

Read More