இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கத்துக்கு அறிக்கை

முஸ்லிம் சமூகம் தொடர்பில் தப்பான எண்ணத்தை தோற்றுவிக்கும் வகையில், உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளியிடுகின்றமை சகிப்புத் தன்மைக்கு எதிரானது என  ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் குழு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் குழு இன்று(12) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கையின் முஸ்லிம் சமூகத்தை நோக்கிய அரசியல் ரீதியான அழுத்தங்கள் தொடர்பில் நாம் அதிகளவு கவனம் செலுத்துவதுடன் இந்த நடவடிக்கைகள் சமாதானம் மற்றும் ஒருமைப்பாடு செயற்பாடுகளுக்கு தடங்கலாக அமைந்துள்ளதாகவும் நாம் கருதுகின்றோம். தப்பான எண்ணத்தை தோற்றுவிக்கும், உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளியிடுகின்றமை சகிப்புத் தன்மைக்கு எதிராக அவர்களைத் தூண்டுவதாக அமைந்துள்ளன. பிரதமருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது எமது கருத்துக்களை நாம் பகிர்ந்து கொண்டோம். அச்சந்தர்ப்பத்தில் வெறுக்கத்தக்க பேச்சுகளுக்கு எதிராகவும், மதங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் அமைப்பை நிறுவுவதிலும் அரசாங்கம் காண்பிக்கும் அர்ப்பணிப்பான செயற்பாடுகளை…

Read More