முன்னால் அமைசர் ரிசாதை உடனடியாக கைது செய் தேரர்கள் உண்ணாவிரதம்.

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை கைது செய்யுமாறு கோரி தேரர்கள் சிலர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாத்தறையிலுள்ள விகாரை ஒன்றில் தேரர்கள் சிலர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்த ரிசாத் பதியுதினுக்கு எதிராக உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அவரை கைது செய்யும் வரையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடரவுள்ளதாக தேரர்கள் அறிவித்துள்ளனர். தேரர்களின் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் பெருமளவு மக்கள் அங்கு கூடியுள்ளதாக தெரிய வருகிறது. முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசா? இல்லை இலங்கை பௌத்த குடியரசா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Read More

முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும் – ஓ.ஐ.சி கோரிக்கை !

இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள இஸ்லாமிய சர்வதேச கூட்டமைப்பான ஓ.ஐ.சி ,முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கேட்டுள்ளது. சவூதியில் நடந்த 14 ஆவது தேசிய மாநாட்டில் இது தொடர்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. முழு அறிக்கையின் இணைப்பு https://www.oic-oci.org/docdown/?docID=4496&refID=1251

Read More