தமிழகத்தை தலை குனியச் செய்த பொள்ளாச்சி கொடூரம் – துணை போகும் அதிமுக

இவ்வளவு கொடூரமான, அஞ்சி நடுங்கத்தக்க, வெட்கக் கேடான சம்பவம் தமிழகத்தில் நடக்கும் என்று யாரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டோம். தினம் தினம் பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அங்கொன்றும், இங்கொன்றுமாக சில அரிப்பெடுத்த அயோக்கியர்களால் அவை நிகழ்த்தப்பட்டாலும், பொதுவாக பெண்களிடம் மிக கண்ணியமாக தமிழக ஆண்கள் நடந்து கொள்வார்கள் என்ற பார்வை தான் இருந்தது. ஏற்கெனவே உலகில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடு என இந்தியா பெயர் எடுத்திருக்கின்றது. ஆனால் இனி இந்தியாவில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற மாநிலம் தமிழ்நாடுதான் என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு இன்று தமிழ்நாட்டின் பெயர் சீரழிந்து இருக்கின்றது. பெண்கள் சுதந்திரமாக நடமாடுவதற்குத் தகுதியற்ற மாநிலமாக இந்த மானங்கெட்ட குற்றக் கும்பலின் ஆட்சி மாற்றி இருக்கின்றது. எங்கெல்லாம் அதிகார பலமும், பணபலமும் கட்டுக் கடங்காமல் அதிகரிக்கின்றதோ…

Read More