மஹிந்த மற்றும் அமைச்சரவைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவைக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக அனுமதியில்லை என்றும், அவர்களின் நியமனங்களை செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Read More

மகிழ்ச்சி என்பது அருமருந்து.

  வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா? இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் “The way to happiness ” இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ளது. 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. “The way to happiness ‘ புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழிமுறைகள். “இவற்றை உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான சந்தோஷத்துக்கான அடித்தளம்’ என்று ஆசிரியர் ரான் ஹப்பார்ட் அடித்துச் சொல்கிறார். “சந்தோஷத்தின் வழி’யாக அவர் முன்வைக்கும் அந்த எளிய சூத்திரங்கள், இங்கே…

Read More

மக்கள் பிரதிநிதிகளின் தகுதியும் இலட்சணமும்

  ‘யாரும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதற்காக வற்புறுத்தப்படவில்லை, அமைச்சராக வருவதற்காக கட்டாயப்படுத்தப்படவில்லை. மிகப் பெரும் வரப்பிரசாதங்களைக் கொண்ட அந்த வகிபாகத்தை நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்கின்றீர்கள் என்றால் நீங்கள் அதனோடு சேர்த்து பெரிய பொறுப்புக்களையும் எடுத்துக் கொள்கின்றீர்கள்’ என்று பிரிட்டனின் பிரபல அரசியல்வாதியும் கல்வி இராஜாங்க செயலாளராக பதவி வகித்தவருமான மைக்கல் கூவ் ஒரு தடவை சொன்னார். இந்த கருத்துநிலையில் நின்று பார்த்தால் நமது அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக பிரதிநிதித்துவ அரசியலில் இருக்கின்ற நபர்களின் பொறுப்புடைமையும் பொறுப்புக்கூறும் தன்மையும் எந்தளவுக்கு இருக்கின்றது என்பது கண்கூடு. அத்துடன், பாhரளுமன்றத்திலும் அரசியல் பரப்பிலும் சில அரசியல்வாதிகள் காட்டுகின்ற ‘கூத்துக்கள்’ அவர்களது ஒப்பனைகளைக் களைத்து, அவர்களுடைய தகுதியையும் ஒழுக்கத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகின்றன. ஒவ்வொரு பதவிக்கும் ஒரு அந்தஸ்து இருக்கின்றது. அந்த பதவிக்குண்டான கௌரவத்தையும் தகுதியையும் பக்குவத்தையும் கொண்டிருக்கின்ற நபர்கள்தான் பதவி…

Read More

அக்கறையில்லாத அரசியல் தலைமைகள்

சஹாப்தீன் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் நிலை இன்னும் நீடித்துக் கொண்டிருக்கின்றது. ஜனநாயகத்தை பேணுமாறு சர்வதேச நாடுகளினாலும், ஐக்கிய நாடுகள் சபையினாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கேட்டுக் கொண்ட போதிலும், அவர் ஒரு பொதுத் தேர்தலுக்குரிய நகர்வுகளை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்தராஜபக்ஷவுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றார். ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தாலும் என் வாழ் நாளில் மீண்டுமொரு தடவை ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிடிவாதமாக இருக்கின்றார். இந்த பிடிவாதத்தின் பின்னணியில் அவரின் அரசியல் தேவை இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே பாராளுமன்றத்தில் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்தராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போது அதற்கு எதிராக பாராளுமன்றத்தை போர்க்களமாக மாற்றிய ஆளுந் தரப்பினர், தற்போது பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்துக் கொண்டிருக்கின்றார்கள். உலகத்தில் பாராளுமன்ற அமர்வினை…

Read More