நான் விக்னேஸ்வரனோ கஜேந்திரகுமாரோ சுரேஷோ அல்ல- சுமந்திரனை சாடிய மனோ கணேசன்

  எல்லா மரங்களையும் கொத்தி துளைத்த துணிச்சலில் மரங்கொத்தி பறவை வாழை மரத்தை கொத்தி மாட்டிக் கொண்ட கதைபோல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்னுடன் கதைக்க முயன்று மாட்டிக் கொள்கிறார். முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடனும், கஜேந்திரகுமார் பொன்னபலத்துடனும், சுரேஸ் பிறேமச்சந்திரனுடனும் பேசுவதுபோல் என்னுடனும் பேசிவிடலாம் என நினைக்கிறார். ஆனால் நான் சீ.வி.விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ, சுரேஸ் பிறேமச்சந்திரனோ அல்ல.“இப்படி தெரிவித்தார் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன். பல்வேறு நிகழ்ச்சிகளிற்காகவும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் மனோகணேசன், இன்று(10) மாலை செய்தியாளர்களை சந்தித்தார். இதன்போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். அண்மையில் மனோ கணேசனை பகிரங்கமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் மனோ கணேசன். அவர் மேலும் கருத்து தெரிவித்தபோது- “தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

Read More

சுவிஸ் குமார் தப்பிக்க இடமளித்தவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு

பாறுக் ஷிஹான் வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ் குமாரை இரண்டு கோடி ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்று தப்பிச்செல்ல இடமளித்தமை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அநுருத்த லலித் ஜயசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ‘பி’ அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து, வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஸ்ரீகஜன் என்பவர் கைது செய்யப்பட வேண்டுமென நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் குறித்த வாதத்தை மறுதலித்து அநுருத்த லலித் ஜயசிங்கவிற்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை எனவும், அவரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை…

Read More

தேயிலை பறித்த பெண் பரிதாப மரணம்

  இன்று (10) காலை 8.30 மணியளவில் தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த சின்னையா தெய்வானை (56) எனும் மூன்று பிள்ளைகளின் தாயார் மஸ்கெலிய காடிமோர் தோட்ட பகுதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். மழை நேரத்தில் கால் வழுக்கி வீழ்ந்த போது கல்லில் அடிபட்டு அதே இடத்தில் உயிர் துறந்துள்ளார்.

Read More

பாதுகாப்பு, நலன்புரி, தேசிய அபிவிருத்தி என்பனவற்றிற்கு விரிவான பணிகளை இராணுவம் நிறைவேற்றியுள்ளது

இராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்து மேற்கொண்ட முன்னோடிப் பணிகள் காரணமாகவே நாட்டில் தற்போது நிரந்தர சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களின் போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவர இராணுவம் மகத்தான பணிகளை நிறைவேற்றுகிறது. தேசிய அபிவிருத்தியின் முன்னோடியாகவும் இராணுவத்தினர் பாரிய பொறுப்புக்களை நிறைவேற்றி வருகின்றனர். இலங்கை இராணுவத்தின் 69ஆவது ஆண்டு நிறைவையொட்டி இராணுவத் தளபதியினால் வெளியிட்டுள்ள பாராட்டுச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இறைமை, ஆள்புலம் என்பனவற்றை பாதுகாக்க இலங்கை இராணுவம் உருவாக்கப்பட்டு 69 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்தப் பணிகளில் இணைந்து கொண்ட அனைத்து இராணுவ வீரர்களுக்கும் இராணுவத் தளபதி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.   தற்போது, இராணுவம் என்றும்…

Read More

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க 33 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு

தற்சமயம் நிலவும் அடைமழையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென 33 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராஜ தெரிவித்துள்ளார். சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக பத்து மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதேவேளை, தற்சமயம் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 82 தசம் நான்கு சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால், தற்சமயம் இடம்பெறும் நாளாந்த நீர் மின் உற்பத்தி 55 சதவீதத்தைத் தாண்டுவதாக வலுசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். நாளாந்த மின்சார கேள்வியும் தற்சமயம் குறைவடைந்திருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருள்களின் விலை மறுசீரைமப்பு  இன்று நள்ளிரவு (11) முதல் அமுலுக்கு  வருகிறது எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு உட்பட்டவகையில், எரிபொருட்களின் விலை ஒவ்வொரு மாதத்தினதும் 10 ஆவது நாளில் திருத்தம் செய்யப்படுவதற்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெற்றோல் Octane 92  – ரூபா 149 இலிருந்து ரூபா 155 ஆக ரூபா 6 இனாலும் பெற்றோல் Octane 95  – ரூபா 161 இலிருந்து ரூபா 169 ஆக ரூபா 8 இனாலும் சுப்பர் டீசல் – ரூபா 133 இலிருந்து ரூபா 141 ஆக ரூபா 8 இனாலும் அதிகரித்துள்ளது. ஒட்டோ டீசல் – ரூபா 123 (விலையில் மாற்றமில்லை)

Read More

அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற்பயிர் செய்கையில் விவசாயிகள் ஆர்வம்

அம்பாறை  மாவட்டத்தில் பெரும்போக நெற்பயிர் செய்கையில் அதிகளவான விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அண்மையில் பெய்த மழையை அடுத்து நாவிதன்வெளி சவளக்கடை சொறிகல்முனை 6 ஆம் கொலணி  ஆகிய பிரதேங்களில் உள்ள நெற் காணிகளை துப்பரவு செய்து உழுது வருகின்றனர். இம்முறை அம்பாறை மாவட்டத்தில்  சுமார் 83 ஆயிரம் ஹெக்டயர் காணிகளில் நெற் செய்கை இடம்பெற்ற உள்ளதுடன் விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை விவசாய திணைக்களம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. பாறுக் ஷிஹான்

Read More

யாழ்.பல்கலையின் நிலை குறித்து நாடாளுமன்றில் குரல் கொடுத்த எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தாதியியல் கற்கைநெறிக்கான பதிவினையும் அங்கீகாரத்தினையும் வழங்குவதில் தடைகள் ஏதும் காணப்படுகின்றனவா என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற கேள்விநேரத்தின்போதே  கலாசார அலுவல்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அவர்களிடம்இவ்வாறு கெள்வி எழுப்பியிரந்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஓர் அலகாக செயற்பட்டு வருகின்ற இணை மருத்துவ பிரிவில் மருந்தகவியல் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம் தாதியியல் ஆகிய மூன்று பிரிவுகள் செயற்பட்டு வருகின்றநிலையில் தாதியியல் கற்கை நெறிக்கு இதுவரையில் பதிவும் அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை எனத் தெரிய வருகின்றது. இதன் காரணமாக சேவைகளில் பதவிப் பிரமாணம்வேலைவாய்ப்பு பதவி உயர்வுகள் உயர் கல்வி கற்பதற்கானத் தடை போன்ற பிரச்சினைகளை மேற்படி மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருப்பதாகத்…

Read More

யாழில் பலத்த சோதனை மூவர் கைது 81 பேருக்கு எதிராக வழக்கு பதிவு

யாழ்ப்பாணம் சுன்னாகம் மற்றும் மானிப்பாய் பொலிஸ் பிரிவுகளில் நேற்றைய தினம்(9) முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் தேடுதல் நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 81 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 21 பேரின் வீடுகள் சோதனையிடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த நடவடிக்கை வடக்கு மாகாண சிரேஸ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலில் யாழ்ப்பாணப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் ஏற்பாட்டில் இத்தேடுதல் நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டது. வாள்வெட்டு வன்முறைகள் அதிகரித்த பகுதிகள் எனவும் வன்முறைகளில் ஈடுபடுவோரின் வதிவிடங்கள் உள்ள பகுதிகளாக இனங்காணப்பட்ட யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் கொக்குவில் – அதனை அண்டிய பகுதிகள் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் சுன்னாகம் பொலிஸ் பிரிவு…

Read More

குரங்குகளின் தொல்லை அவதியுறும் கிழக்கு மக்கள்

தமஅம்பாறை  மாவட்டத்தில் கல்முனை  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் உள்ள   காட்டுப்பகுதியில் வாழ்ந்த குரங்குகள்வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை உண்டு விட்டு செல்வதாகவும் அத்தோடு அப்பகுதியில் பிரதான வீதிகளில் குறுக்காக  செல்வதனால்  வீதிகளில் நடமாட சிரமமாக உள்ளதாக மக்களும் விசனம் தெரிவிக்கின்றனர். மேலும் பயிர் நிலங்களில் மட்டுமல்லாது  வீட்டுத் தோட்டங்கள் போன்றவற்றையும் அழிக்கின்றன. இது தவிர இக்குரங்குகளின் தொல்லையினால் உணவு பொருட்களை பாதுகாக்க முடியாத போவதுடன் சிறிய குழந்தைகளை முற்றத்தில் விளையாட விடவும் பயமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அத்துடன்  இந்த குரங்குகளின் தொகை தினமும் அதிகரிப்பதாகவும் ஏனைய பிரதேசங்களில் இத்தொல்லையை தடுப்பதற்கு  வாயு துப்பாக்கிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது. இக்  குரங்குகளின் செயற்பாட்டால் வகுப்பறைகளில் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்குரிய எந்த பொருட்களையும் பாதுகாத்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.…

Read More