தாழை மரத்தில் தொங்கிய 13வயது சிறுமி! கொலையா? தற்கொலையா?

காலி தடல்ல பிரதேச கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தாழை மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவரின் சடலம் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. மேலும், கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுமி இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போனமை தொடர்பாக குறித்த சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது தற்கொலையா அல்லது கொலையா என, காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read More

கல்முனை மாநகர சபையில் பல கோடி ரூபா நிதி மோசடி, ஆளுநரிடம் எதிரணியினர் மகஜர் கையளிப்பு.

கல்முனை மாநகரசபை மேயர் சிரேஷ்ட  சட்டத்தரணி எ.எம்.றக்கீபுக்கு எதிராக மாநகரசபை உறுப்பினர்கள் மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர். இவ்வார்ப்பாட்டம் திங்கட்கிழமை (1)  மாலை இடம்பெற்றது. கல்முனை மாநகரசபையில் 41 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில்   ஒன்றுபட்ட எதிர்க்கட்சியெனக்கூறப்படும் 25உறுப்பினர்கள் மேயருக்கு எதிராக கையொப்பமிட்டு குற்றச்சாட்டு மகஜரையும் கொண்டுவந்திருந்தனர். மாநகரசபையில் இடம்பெற்றுவருவதாகக்கூறப்படும் பலகோடிருபா பெறுமதியான நிதிமோசடிகள், நடைமுறைக்குமாறான சர்வாதிகாரச் செயற்பாடுகள், பாரபட்சங்கள், நிதிநிலையியற்குழுவினதோ பொதுச்சபையினதோ அங்கீகாரமின்றி தன்னிச்சையான செயற்பாடு, கேட்டால் சொல்லமுடியாது என சர்வாதிகாரப்பதில் இப்படி பல குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றச்சாட்டுப்பத்திரம் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. கடந்த 6மாதங்களில் மாதாந்தக்கூட்டங்கள் நடைபெற்றிருந்தும் இதுவரை எந்தக்கூட்டத்திலும் மாதாந்த வரவுசெலவுஅறிக்கை மற்றும் வேலைத்திட்ட முன்னேற்ற அறிக்கை என எதுவுமே சபைக்கு சமர்பிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்முனை மாநகரசபையில் ஜக்கியதேசியக்கட்சி(மு.கா)க்கு 12ஆசனங்களும் சாய்ந்தமருது சுயேச்சைஅணிக்கு 9ஆசனங்களும் த.தே.கூட்டமைப்பிற்கு 7ஆசனங்களும் அ.இ.ம.காங்கிரசுக்கு 5ஆசனங்களும்…

Read More

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு கல்முனையன்ஸ் போரம் விஜயம்.

கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (Eastern Cancer Care Hospice) விஷேட அழைப்பின் பேரில் ஏறாவூரில் அமைந்துள்ள அவர்களின் பராமரிப்பு நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை 28-09-2018 அன்று கல்முனையன்ஸ் போரத்தின் செயற்பாட்டாளர் குழு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. கல்முனை பிராந்தியத்தில் புற்றுநோய் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வுகள், புற்றுநோயாளர்களுக்கான மருத்துவம் மற்றும் பராமரிப்பு போன்றவற்றை முன்னெடுப்பதற்கான அழைப்பை ECCH நிறுவனம் கல்முனையன்ஸ் போரத்திடம் உத்தியோகபூர்வமாக விடுத்திருந்தது. அதனடிப்படையிலேயே குறித்த விஜயம் இடம்பெற்றது. இவ்விஜயத்தின் போது ECCH நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம், முடிவுறும் தருவாயில் உள்ள புற்றுநோய் பராமரிப்பு நிலையத்தினது கட்டுமானங்கள், பராமரிப்பு நிலையம் இயக்கத்திற்கு வந்ததன் பிற்பாடுள்ள நடைமுறைச்சவால்கள் மற்றும் அதிகரித்துவரும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுகளை மக்களுக்கு வழங்குதல் போன்றவை குறித்து ECCH நிறுவனத்தின் பிரதம ஆலோசகர் புற்றுநோய் வைத்திய நிபுணர் முஹம்மது இக்பால் அவர்களால் கல்முனையன்ஸ் போரத்தின்…

Read More

2018-ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு: லேசர் பிசிக்ஸ் பிரிவில் புதுமை செய்த அமெரிக்கா, பிரான்ஸ், கனடா விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

ஸ்வீடனில் உள்ள நோபல் பரிசுக்குழுவினர் 2018-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை அமெரிக்கா, பிரான்ஸ், கனடா விஞ்ஞானிகளுக்கு அறிவித்துள்ளனர். இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கிக் கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. 2018 மருத்துவத்துக்கான நோபல்: புற்றுநோய் சிகிச்சையில் புதிய பாதையைத் திறந்த ஜேம்ஸ் பி.அலிசன், டசூகு ஹோஞ்சோ ஆகியோர் வென்றனர் மருத்துவத்துக்கான நோபல் பரிசு புற்றுநோய் சிகிச்சையில் ‘இம்யூன் செக் பாயிண்ட் தெரபி’ (நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சை) என்ற பாதைத்திறப்புக் கண்டுபிடிப்பைச் செய்ததற்காக அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி ஜேம்ஸ் பி.அல்லிசன், மற்றும் ஜப்பானின் டசூகு ஹோஞ்சோ ஆகியோருக்கு 2018-ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு…

Read More

2018 மருத்துவத்துக்கான நோபல்: புற்றுநோய் சிகிச்சையில் புதிய பாதையைத் திறந்த ஜேம்ஸ் பி.அலிசன், டசூகு ஹோஞ்சோ ஆகியோர் வென்றனர்

புற்றுநோய் சிகிச்சையில் ‘இம்யூன் செக் பாயிண்ட் தெரபி’ (நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சை) என்ற பாதைத்திறப்புக் கண்டுபிடிப்பைச் செய்ததற்காக அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி ஜேம்ஸ் பி.அல்லிசன், மற்றும் ஜப்பானின் டசூகு ஹோஞ்சோ ஆகியோருக்கு 2018-ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு கிடைத்துள்ளது. டசுகூ ஹோஞ்சோ ஜப்பான் கியோட்டோவில் 1942-ம் ஆண்டில் பிறந்தவர். 1984 முதல் இவர் கியோட்டோ பல்கலையில் பணியாற்றி வருகிறார். புற்றுநோயினால் ஆண்டுக்கு மில்லியன் கணக்கில் மக்கல் பலியாகி வருகின்றனர். புற்றுநோய் மனித உயிர் வாழ்க்கைக்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது. இதனையடுத்து நம் உடலில் உள்ள இயல்பான நோய் எதிர்ப்பு ஆற்றலை இன்னும் அதிகப்படுத்தி, தூண்டி, புற்றுநோக்கட்டி செல்களை அது தீவிரமாகத் தாக்கும் கேன்சர் சிகிச்சையில் புதிய பாதைத் திறப்பை இவர்கள் இருவரும் மேற்கொண்டனர். நம் உடல் நோய் எதிர்ப்புச் சக்தி…

Read More

இந்தோனீசியா நிலநடுக்கம், சுனாமி: பலி எண்ணிக்கை 1347

இந்தோனீசியாவின் சுலவேசி தீவை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,347 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் முகமை தெரிவிக்கிறது. முன்பு இந்த எண்ணிக்கை 844 ஆக இருந்தது. முதலில் நினைத்தததைக் காட்டிலும் பாதிக்கப்பட்ட பகுதி பெரியதாக உள்ளது என அந்த முகமை தெரிவித்துள்ளது. வெள்ளியன்று 7.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்த கட்டடங்களின் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர் என முகமையின் செய்தி தொடர்பாளர் சுட்டோபோ பூர்வோ நுக்ரோஹோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நிலநடுக்கம் 6 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகளை உருவாக்கியது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்தோனீசியாவின் பாலு நகரில் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியவர்களை மீட்புப் பணியாளர்கள் வெறும் கைகளோடு தேடி வருகின்றனர். மக்களின் நிலை சுனாமி காரணமாக மக்கள் உணவு, தண்ணீர், எரிபொருள் இல்லாமல் தவிக்கின்றனர்.…

Read More

செரீனா வில்லியம்ஸ் மார்பக புற்றுநோய் குறித்து வெளியிட்ட காணொளி வைரலாகிறது

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை ஒட்டி பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அக்டோபர் மாதம் முழுவதும் சர்வதேச மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். 1990ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிவினில்ஸ் என்ற இசைக்குழுவால் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வெளியிடப்பட்டு உலகளவில் பிரபலமான “ஐ டச் மைசெல்ஃப்” என்று தொடங்கும் பாடலை தனது மார்பகங்களை கையால் மறைத்துக்கொண்டு செரீனா வில்லியம்ஸ் பாடும் வகையில் இந்த காணொளி அமைந்துள்ளது. “இனம், நிறம் என எவ்வித வேறுபாடுமின்றி உலகம் முழுவதுமுள்ள பெண்களை பாதிக்கும் பிரச்சனைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான் என்னுடைய எல்லையை மீறி இந்த…

Read More

ஈக்வேடாரில் புதிதாக காணப்பட்ட தேன்சிட்டு காக்கப்படுமா?

ஈக்வேடாரில் புதியவகை ஹம்மிங் பேர்ட் (தேன்சிட்டு) ஒன்று சர்வதேச பறவையியலாளர் குழு ஒன்றால் காணப்பட்டுள்ளது. அந்த பறவைக்கு ஒரியோட்ரோகிலஸ் சைனோலெமஸ் அல்லது நீல கழுத்து ஹில்ஸ்டார் என பெயரிடப்பட்டுள்ளது. நான்கு அங்குல நீளத்திற்கு கரு நீல கழுத்து இருப்பதும் இதற்கொரு காரணம். ‘பல்லுயிர் பெருக்கம்’ ஈக்வேடாரரில் பல்லுயிர் பெருக்கம் சிறப்பாக உள்ளது. இந்நாட்டில் மட்டும் 132 வகை ‘ஹம்மிங் பேர்ட்’கள் உள்ளன. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நீல கழுத்து ஹில்ஸ்டார்கள் மொத்தமே சுமார் 300 தான் உள்ளதாக கூறும் பறவையியல்யாளர்கள், இந்த இனம் அழிவின் விளிம்பில் இருப்பதாக கூறுகின்றனர். ஈக்வேடார், வெனிசுவேலா, டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகளை சேர்ந்த பறவையியலாளர்கள் குழு இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளது. இந்த குழுவுக்கு ஃப்ரான்சிஸ்கோ தலைமை தாங்கினார். அச்சுறுத்தலில் வாழ்விடம் பசிபிக் பெருங்கடல் அருகே உள்ளா லோஜா மற்றும் எல் ஒரோ…

Read More

பார்ஹம் சாலிஹ் ஈராக்கின் புதிய அதிபராக தேர்வு

இராக்கின் புதிய அதிபராக  அந்நாட்டின் மூத்த அரசியல்வாதியான  பார்ஹம் சாலிஹ்  நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூத்த மிதவாத அரசியல்வாதியாக அறியப்பட்ட சாலிஹ் , அந்நாட்டின்  இரண்டு முக்கிய குர்து கட்சிகளிடையே நடந்த வாக்கெடுப்புகளின் இறுதியில் அதிபர் வேட்பாளராக வெற்றி பெற்றிருக்கிறார். குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சி மற்றும் குர்திஸ்தான் தேசப்பற்று சங்கம் ஆகியவற்றுக்கிடையே நடந்த முரண்பாடு காரணமாக வாக்கெடுப்பில் தாமதம் ஏற்பட்டதாக ஷியா பிரிவின் சட்டமன்ற உறுப்பினர் ஹமித் அல் மவ்சாமி தெரிவித்தார். 58 வயதான  பார்ஹம் சாலிஹ், குர்திஷ் மிதவாத அரசியல்வாதி ஆவார். பிரிட்டனில் பொறியியல் கல்வி பயின்றவர். மேலும் இராக்கின் குர்திஸ் மாகாணத்தின் பிரதமராகவும், இராக் கூட்டாட்சி அரசாங்கத்தின் துணை பிரதமராகவும் சாலிஹ் இருந்திருக்கிறார். 2003 ஆம் ஆண்டு இராக்கில் அமெரிக்கப் படையால் சதாம் உசேன் வீழ்த்தப்பட்ட பிறகு, அந்நாட்டில் உள்ள…

Read More

சுவிஸ் தூதுவர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன ஆகியோருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த சந்திப்பின்போது அவர்களிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.   இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பாளர் மேஜர் ஜெனரல் டீஏஆர் ரணவக்க மற்றும் சுவிஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Read More