அக்கினி குஞ்சுகள்

அக்கினி முட்டைகளை அடைகாக்கும் அண்டங் காக்கைகளே ! சிறு பொறி கூட பெரும் தணலாகும் அக்கினி குஞ்சுகள் சிறகு விரிக்கும் அண்டங் காக்கைகள் அணலில் புழுவாகும் அதுவே அதர்மத்தை அரிக்கும் அவதாரம். சத்தியம் சற்று ஓய்வெடுக்கும் ஆனால் நிச்சயம் ஒரு நாள் பலி எடுக்கும். தங்கம் தீயில் குளிப்பதனால் தரமாய் மீண்டும் உயிர் எடுக்கும் தகடுகள் வீணே நெருப்பமிலத்தில் குதிப்பதினால் முகவரி இழந்து மூர்ச்சை அடையும் தானே விதைத்தது வீணே அழியும் தர்மம் நீதியின் தலைகாக்கும் !

Read More

ரெலோ தேசிய மாநாடு உள்வீட்டு மோதல் உக்கிரம்.

ரெலோவின் பத்தாவது தேசிய மாநாடு கடந்த சனி, ஞாயிறு தினங்களில் மட்டக்களப்பில் நடைபெற்றது. மறைந்த தலைவர்கள் இந்நாள் தலைவரின் ‘கட்டவுட்டுக்கள்’ வீதி ஓரங்களில் நிலத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மங்கள விளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து ஏதும் இல்லாமல் மாநாடு ஆரம்பமாகியது. மதத் தலைவர்களின் ஆசியுரை கூட இல்லை. இது எவ்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பொது மக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிற கட்சியினர் யாருமே கலந்து கொள்ளாமல் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் பதவியினை நோக்கமாகக் கொண்டு உள்நுழைந்த பலரே கதிரைகளை அலங்கரித்திருந்தனர். நிர்வாகிகள் தெரிவு வரிசையில் தலைவராக செல்வம் அடைக்கலநாதனும், செயலாளராக சிறீகாந்தாவும் தெரிவாகினர். கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன், இந்திரகுமார் பிரசன்னா ஆகியோர் உப தலைவர் ஆகினர். இவர்களைப்போல் 83,84 ஆண்டு காலப்பகுதியில் இருந்து தொடர்ச்சியாக அமைப்பில் இருக்கும் வினோ நோகராதலிங்கம், விந்தன் கனகரட்ணம் ஆகியோர்…

Read More

யாழ் பல்கலைகழக மாணவிகளை பாலியல் வதை பயிரை மேயும் வேலிகள்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் புரிந்த பேராசிரியர்கள் தொடர்ந்து கடமையிலிருக்கிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கையோ, விசாரணையோ நடத்தப்படவில்லை என யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது. பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் இந்த பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்கள். யாழ் பல்கலைகழக மாணவர்களாலும், ஒட்டுமொத்த சமூகத்தாலும் வெறுக்கப்படும் வகையில் மாணவிகள் மீது பாலியல் வதைகளும், அத்துமீறல்களும் பல்கலைகழகத்திற்குள் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த மோசமான செயலை செய்தவர்கள் தப்பிச்செல்லும் நிலைமையே உள்ளது. பல்கலைகழக பேராசிரியர் ஒருவர் மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்த பேராசிரியர் மீது முன்னரும் இப்படியான பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் இப்படியானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த இழிவான செயற்பாடுகள்…

Read More

250 தமிழ் குடும்பங்களுக்கு ஸம்ஸம் பவுண்டேசன் நீர் வசதி

நுவரெலியா சாந்திபுரம் ஒலிபண்ட் தோட்டம் கீழ்ப்பிரிவில் வசிக்கும் சுமார் 250 தமிழ்க் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் திட்டம் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இம் மக்களது பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு கடந்த வருடம்  ஒக்டோபர் மாதம் ஸம் ஸம் பவுண்டேஷன் இந்த குடிநீர் திட்டத்தை ஆரம்பித்தது. செலவில் மேற்கொள்ளப்பட்ட இத் திட்டம் அண்மையில் பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இத் திட்டத்திற்கான சுமார் 4 மில்லியன் ரூபா நிதியினை ஸம் ஸம் பவுண்டேஷனின் பணிப்பாளர் சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஸமீக் அவர்களின் புதல்வி ஸாலிஹா ரம்லி அவர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் ஸம் ஸம் நிறுவனத்தின் தலைவர்,பணிப்பாளர்சபை உறுப்பினர்கள்,சர்வமதத் தலைவர்கள்,அரச அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Read More

போதைப்பொருள்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் இராணுவத்துக்கு

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களைத் தடுப்பதற்கான அதிகாரத்தை இராணுவத்தினருக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைக்கும்போது அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினர் பொலிஸாருக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர். போதைப்பொருட்கள் தொடர்பான தகவல்களை, இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பொலிஸாருக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில், போதைப்பொருட்களுக்கு எதிராக நடவடிக்கைகளை விரிவுப்படுத்துவற்கு சட்டரீதியான அதிகாரத்தை இராணுவம் கோரியுள்ளது.” என்றார். Share it

Read More

மூலிகைகளின் ராணி துளசியின் குணங்கள்.

மாத்திரைகளை விட நம்மைச் சுற்றி கிடைக்கும் பொருட்களில் எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது. ஆனால் அதனை யாருமே பயன்படுத்த முன்வருவதில்லை. மூலிகைகளின் ராணியான துளசியை உட்கொள்வதால் உடல் நலனுக்கு ஏற்படும் நன்மைகள் தெரியுமா? தொண்டைப்புண் : தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும். தலைவலி : தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு துளசியை அரைத்து, அதில் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும். இதய நோய் : தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும். சிறுநீரக கற்கள்…

Read More

மூலிகைகளின் ராணி துளசி மருத்துவக் குணங்கள்.

மாத்திரைகளை விட நம்மைச் சுற்றி கிடைக்கும் பொருட்களில் எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது. ஆனால் அதனை யாருமே பயன்படுத்த முன்வருவதில்லை. மூலிகைகளின் ராணியான துளசியை உட்கொள்வதால் உடல் நலனுக்கு ஏற்படும் நன்மைகள் தெரியுமா? தொண்டைப்புண் : தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும். தலைவலி : தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு துளசியை அரைத்து, அதில் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும். இதய நோய் : தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும். சிறுநீரக கற்கள்…

Read More

சட்டவிரோத படிகளை உடைக்க ஒரு மாதகால அவகாசம்.

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுப்படிகளை ஒரு மாத காலத்திற்குள் அகற்றுமாறு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் விசேட அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அந்த விசேட அறிவுறுத்தலில் மேலும் தெரிவித்திருப்பதாவது; “கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல வீதிகளில் வீடுகளின் நுழைவாயில் படிகள் அவ்வீதியோரங்களில் நிர்மாணிக்கப்பட்டிருப்பதானது வீதிகளின் அகலத்தை குறைத்திருப்பதுடன் போக்குவரத்திற்கும் பெரும் இடைஞ்சலாக இருப்பதை எல்லோரும் அறிவோம். இந்த சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் கல்முனை மாநகர சபைக்கு அதிக முறைப்பாடுகள் கிடைத்தவண்ணம் உள்ளன. எனவே, இந்த சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்போர் அப்படிகளை தாமாகவே அகற்றி, வீதிப் போக்குவரத்துகளில் ஏற்பட்டுள்ள இடைஞ்சல்களையும் விபத்துக்களையும் தவிர்ந்து கொள்வதற்கு உதவுமாறு மாநகர முதல்வர் என்ற ரீதியில் அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றேன். இதற்காக எமது மாநகர சபையினால் சம்பந்தப்பட்டோருக்கு…

Read More