கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளராக எம் கே எம் மன்சூர்

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக எம்.கே.எம் மன்சூர். கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக மன்சூர் அவர்கள் ஆளுநரினால் உடன் செயற்படும் வண்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய எம்.ரீ.நிசாம் கிழக்கு மாகாண சிரேஸ்ட மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி நிருவாக சேவை தரம் ஒன்றை சேர்ந்த எம்.கே.எம் மன்சூர் வலயக் கல்வி பணிப்பாளர், மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர், போன்ற பதவிகளில் இருந்து தற்பொழுது பதவி பெறும் வரை மாகாண கல்வி திணைக்களத்தில் வெற்றிடம் இல்லாத நிலையில் கடமையாற்றி வந்தார். இந் நிலையிலையே மாகாண கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று கிழக்கு மாகண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. .

Read More

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி

இந்திய உயர் நீதி மன்றம் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியாவில் கேரளா மாநிலத்திலுள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, 10 முதல், 50 வயது வரையிலான பெண்கள் செல்லக் கூடாது என, பல ஆண்டுகளாகவே கட்டுப்பாடு உள்ளது. இங்கு, எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க, அரசுக்கு ஆட்சேபனை இல்லை என, கேரள மாநில அரசு சமீபத்தில் தெரிவித்தது. இது தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில், இந்திய உயர் நீதி மன்ற நீதிபதிகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கன்வில்கர், சந்திரசூட், நாரிமன், இந்து மல்ஹோத்ரா அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த அமர்வில், 4 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு: பல நூற்றாண்டுகளாக பெண்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டு வருகின்றனர். பெண்கள் எந்த விதத்திலும் ஆண்களுக்கு குறைந்தவர்கள் அல்ல. பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக…

Read More

அடுத்த வருட இறுதிப்பகுதிக்குள் இரண்டாயிரம் வீடுகளை அமைக்க அரசாங்கம் உத்தேசம்

அடுத்த வருட இறுதிப் பகுதிக்குள் இரண்டாயிரம் வீடுகளைக் கட்டி முடிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள 25 இலட்சம் வறிய மக்களின் வீடமைப்புத் தேவையைத் தீர்க்கும் வகையில் 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.   மட்டக்களப்பு – கோரளைப்பற்று, மீராவோடை சுவாமி விபுலானந்தர் கோட்டம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 130 ஆவது எழுச்சிக் கிராமத்தை திறந்து வைத்ததன் பின்னர் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இங்கு 30 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 27 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

Read More

இலங்கைக்கு வருகை தந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளது. இலங்கை அணியுடன் 3 ரெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு ருவன்ரி ருவன்ரி போட்டியிலும் இந்த அணி விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான பயிற்சிப் போட்டி எதிர்வரும் 5ம், 6ம் திகதிகளில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும்.   1வது ஒருநாள் போட்டி எதிர்வரும் 10ம் திகதி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெறும்.

Read More

தகவல் அறியும் உரிமையை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை ஆசிய நாடுகளில் முதல் இடத்தில்

தகவல் அறியும் உரிமையை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை ஆசிய நாடுகளில் முதல் இடத்தை வகிக்கின்றது என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் தகவல் பணிப்பாளர் எம்.அலி ஹஸன் தெரிவித்துள்ளார். இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உலகின் 12 நாடுகளில் இலங்கை மூன்றாம் இடத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.   தகவல் அறியும் சட்டம் மக்களுக்கானது. மக்களை முன்னிலைப்படுத்தி இது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.   தமக்குத் தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளும் உரிமை மக்களுக்கு உரியது. இதன் மூலம் ஜனநாயகமும், சுதந்திரமும் வலுவடைகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

இலங்கையைச் சேர்ந்த சுமார் இரண்டு இலட்சம் பேருக்கு சவுதி அரேபியாவில் தொழில் வாய்ப்பு

இலங்கையைச் சேர்ந்த சுமார் இரண்டு இலட்சம் பேருக்கு சவுதி அரேபியாவில் தொழில் வாய்ப்பு கிட்டவிருப்பதாக அமைச்சர் ரிஷாத் பரியுத்தீன் தெரிவித்துள்ளார். நட்பு நாடு என்ற ரீதியில் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு 30 கோடி அமெரிக்க டொலர்கள் கடன் உதவியாக கிடைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.   2014, 2017 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் மாத்திரம் இலங்கைக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளின் பெறுமதி 21 கோடி அமெரிக்க டொலர்களுக்கும் மேலாகும்.   கடந்த வருடத்தில் இலங்கையில் இருந்து சவுதி அரேபியாவுக்கு இரண்டு கோடியே 70 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள

Read More

பிரதமரின் உலக சிறுவர் மற்றும் முதியோர் தினச்செய்தி

உலக சிறுவர் முதியோர் தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் சிறுவர் உலகினைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும், வயதான முதியோருக்குக் கிடைக்க வேண்டிய அன்பு, கண்ணியம், அவதானத்தினை வழங்கவும் திடசங்கற்பம் பூணுவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள உலக சிறுவர் மற்றும் முதியோர் தினச்செய்தியில்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,   மனிதனிடம் காணப்படும் மிகவும் உன்னதமான வளம் பிள்ளைகள் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. அவர்களது வாழ்வினை மேம்படுத்துவதற்கு எந்தவொரு அர்ப்பணிப்பினையும் செய்ய பெற்றோர் தயாராக உள்ளனர். முழு வாழ்வினையும் தமது பிள்ளைகள் மற்றும் சமூகத்திற்காக அர்ப்பணித்த இரண்டாவது குழந்தைப் பருவத்தில் வாழ்வோர் எனக் கருதப்படும் முதியோரையும் அவ்வாறே கவனித்துப் பராமரிப்பது எமது பொறுப்பாகும்.   ‘துணிச்சலுடன் முன்னோக்கிப் பயணிக்க சிறுவர்களுக்குப் பக்கபலமாக இருங்கள்’ என்பது உலக சிறுவர் தினக் கருப்பொருளாகக் காணப்படும்போது,…

Read More

ஜனாதிபதியின் சர்வதேச சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்து அனைத்து சிறுவர்களினதும் கல்வி உரிமையை உறுதிப்படுத்தி சிறுவர் உரிமைகள் பற்றிய சகலவித சர்வதேச உடன்பாடுகள் மற்றும் பிரகடனங்களுக்கு அமைவாக செயற்பட எம்மால் முடிந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள சிறுவர் தின வாழ்த்துச்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘வீரியத்துடன் முன்னோக்கி செல்க – சிறுவர்களை பலப்படுத்துக’ என்றும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச சிறுவர் தினக்கொண்டாட்டங்கள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன. சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

Read More

கல்முனை கல்முனையானின் பட்டினம்.

கல்முனை , கல்முனையானின் பட்டினம் அதை கூறூபோட யாருக்கும் அருகதை கிடையாது, மூவினமும் ஒன்றுபட்டு ஐக்கியமாக வாழ வேண்டும் “ கல்முனை வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு வர்த்தக நகரம் அதை சீரளிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது. நவீனமான சந்தை கட்டிடம் கட்டப்பட வேண்டடும். பொதுவில் கல்முனை நவீன கால ஓட்டத்திற் கேற்ப தனது வார்த்தகத்தை மாற்றியமைக்க வவேண்டும், கல்முனை ஒரு மீனவ நகரம். வரலாற்று முக்கியத்துவம் மிக்க “முனை” என்னும் – கடற்கரை பள்ளி, கண்ணகி அம்மன் ஆலயம், அன்னை வேளாங்கன்னி சேர்ச், பண்சலை ஆகிய நான்கு வணக்கஷ்தலங்களாலும் சூழப்பட்ட ஒரு புராதன பூமி. இதில் முன்புபோல் மீன்பிடி ஆரம்பிக்கப்பட அரசில் வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். கல்முனையில் மூவினமும் ஒன்று பட்டு ஒரு அமுக்கக் குழு உருவாக்கப்பட வேண்டூம், கல்முனையில் இனவாதம் பேசி முஸ்லிம்…

Read More