ஜெருசலமில் திறக்கப்பட்ட பரகுவே தூதரகம் மூடப்பட்டது

யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் புனித தலங்கள் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தனது தலைநகர் என கருதி வந்தது. மற்ற நாடுகள் இதை அங்கீகரிக்காத நிலையில், அதிரடியாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து கடந்த டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டார்.இந்த முடிவுக்கு எதிராக அரபு நாடுகள் போர்க்கொடி உயர்த்தின.   எனினும் அவற்றை பொருட்படுத்தாமல், இஸ்ரேல் நாட்டின் கிழக்கு ஜெருசலேம் நகரில் அமெரிக்க அரசு தனது புதிய தூதரகத்தை கடந்த மே மாதம் திறந்து ஒரு புதிய அரசியல் அடையாளத்தை அந்நகருக்கு அளித்தது. அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா நாட்டின் தூதரகம் ஜெருசலேம் நகரில் திறக்கப்பட்டது.   இதைதொடர்ந்து, மூன்றாவதாக பராகுவே நாடும் ஜெருசலேம் நகரில் தனது புதிய தூதரகத்தை அதன் முன்னாள் அதிபர் ஹோராக்கியோ கார்டெஸ் மூலம் திறந்தது. ஆனால், அந்நாட்டில்…

Read More

860 கிலோ ‘யானைப் பறவை’தான் உலகின் மிகப்பெரியது: ஆய்வாளர்களின் விவாதம் முடிவுக்கு வந்தது

உலகிலேயே மிகப்பெரிய பறவை எது ஆய்வாளர்கள் மத்தியில் நீண்ட விவாதம் எழுந்துவந்த நிலையில், மடகாஸ்கரில் வாழ்ந்த 860 கிலோ எடை கொண்ட யானைப் பறவைதான் உலகின் மிகப்பெரியது என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஆய்வாளர்கள் மத்தியில் நீண்டகாலமாக நீடித்து வந்த வாதம், ஆய்வுகள் முடிவுக்கு வந்துள்ளது. உலகின் மிகப்பெரிய பறவையாக கருதப்படும் யானைப் பறவை வரோம்பி டைட்டான் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் தீவில் இந்தப் பறவை வாழ்ந்திருக்கலாம், அங்கு மனிதர்கள் மெல்லக் குடியேறியபின் அந்தப் பறவை அழிவைச் சந்தித்து இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வரோம்பி டைட்டான் பறவையின் எலும்புகள், முட்டைகள், எச்சங்கள் ஆகியவற்றை கைப்பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் இந்தப் பறவையின் எடை ஏறக்குறைய 860 கிலோ இருந்திருக்கலாம், சராசரியாக 650 கிலோ எடை வரை இருந்திருக்கும் என்று ஆய்வாளர்கள்…

Read More

பாகிஸ்தானை வெளியேற்றியது வங்காலதேசம்

அபுதாபியில் நடைபெற்ற ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று கடைசி போட்டியில் வங்கதேசத்திடம் தோற்று பாகிஸ்தான் வீட்டை நோக்கி நடையைக் கட்டியது. நாணய சுழர்ச்சியில் வென்று துடுப்பெடுத்த வங்கதேச அணி 12/3 என்ற நிலையிலிருந்து மொகமது மிதுன் (60), முஷ்பிகுர் ரஹிம் (99) ஆகியோரது அற்புதமான 144 ன்கூட்டணியில் முனைப்புடன் அணியை நிலைப்படுத்த 48.5 ஓவர்களில் 239 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இது வெற்றிக்கான இலக்கு இல்லைதான், ஆனாலும் வெற்றிபெற முடியாததை வெற்றிக்கான இலக்காக மாற்றுவதில்தான் ஓர் அணியின் திறமையும் முனைப்பும் உள்ளது, அந்த வகையில் வங்கதேசம் அபாரமான களத்தடுப்பு, காற்றுப்புகா இறுக்கமான பந்துவீச்சு ஆகியவை மூலம் பாகிஸ்தானை 202/9 என்று வெளியேற்றி இறுதியில் இந்திய அணியைச் சந்திக்கிறது. இந்தத் தொடர் முழுதுமே களத்தடுப்பு படுமோசமாக அமைந்தது பாகிஸ்தானுக்கு, கரண்டியில் சாப்பிட்டாலும் கையில் சாப்பிட்டாலும் உணவு…

Read More

நாடு எதிர்நோக்கும் எந்தவொரு சவாலையும் சந்திக்க இராணுவம் தயார் – இராணுவத் தளபதி .

நீர்க்காகம் என்ற இராணுவ ஒத்திகை பயிற்சியின் நிறைவு விழா நேற்று திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் நடைபெற்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவன் விஜயவர்த்தன தலைமையில் நடைபெற்ற .இந்த விழாவில் பல நாடுகளைச் சேர்ந்த இராணுவ உயர் அதிகாரிகளும வீரர்களும் பங்கேற்றார்கள் இந்த நிகழ்வில் உரையாற்றிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க நாட்டிற்கு விடுக்கப்படும் எதுவித சவாலையும் சமாளிக்க இராணுவம் தயாராக உள்ளது எனத் தெரிவித்தார். குறிப்பாக இரசாயன உயிரியல கதிர்வீச்சு அணுசக்தி அச்சுறுத்தல்களை சமாளிக்கும் விதத்தில் இராணுவம் தயார்படுத்தப்படுகிறது. இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வாழ்த்துத் தெரிவித்துள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் கூறினார்.

Read More

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ள அனைத்து அரச தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் விசேட இராப்போசன விருந்துபசாரம் வழங்கினார். கூட்டதொடருடன் இணைந்ததாக நியூயோர்க் மாளிகையில் (நேற லுழசம Pயடயஉந) இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ் இராப்போசனத்திற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் விசேட அழைப்பு விடுக்கப்பட்டதுடன் இந்நிகழ்வின்போது அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது பாரியாரால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களும் பாரியார் ஜயந்தி சிறிசேன அவர்களும் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர். அதன் பின்னர் ஜனாதிபதிகள் தமது பாரியார்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

Read More

ஜனாதிபதி – மலேசிய பிரதமர் சந்திப்பு

குடிசைவாசிகளுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள வீடமைப்பு செயற்திட்டத்திற்கு உட்சபட்ச ஒத்துழைப்பை வழங்குவதாக மலேசியா பிரதமர் மஹதீர் மொஹமட் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் விஜயம் செய்துள்ள ஜனாதிபதிக்கும் மலேசியாவின் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு நேற்று பிற்பகல் நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.   இதன்போது மலேசிய பிரதமர் சார்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மிகுந்த கௌரவத்துடன் வரவேற்கப்பட்டார்.   இலங்கை தொடர்பில் தான் மிகவும் அக்கறையுடன் செயற்படுவதாக தெரிவித்த மலேசிய பிரதமர் மஹதீர் மொஹமட், இலங்கை பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கு எவ்விதமான ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.   பெருநகர அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் குடிசைவாசிகளுக்காக புதிதாக வீடுகளை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் மலேசிய பிரதமர்…

Read More

பிதுரங்கல புகைப்பட விவகாரம் தொடர்பில் உடனடி விசாரணையை ஆரம்பிக்குமாறு பிரதமர் தெரிவிப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பிதுரங்க மலையில் அரைநிர்வாண புகைப்படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் சேர்த்த இளைஞர்கள் குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த செயலின் பின்னணியில் இருந்த நபர்கள் யார் என்பதை கண்டுபிடிக்குமாறு பிரதமர் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்ததாகவும், தேவைப்படும் பட்சத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பை நாடுமாறு கேட்டுக் கொண்டதாகவும் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.   பிதுரங்கல மலையுச்சியில் அரை-நிர்வாணக் கோலத்தில் தம்மைப் படம் பிடித்து, அதனை சமூக வலைதளங்களில் சேர்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூன்று இளைஞர்களை சீகிரிய பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மூவரும் கலேவல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்கள். 19 வயதிற்கு உட்பட்டவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி.றுவான் குணசேகர தெரிவித்துள்ளார். சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அவர் விடுத்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.…

Read More